பிரதோஷ வழிபாடு ஏன் சிறந்தது தெரியுமா.. சிவனை வழிபட்டால் எதனையும் வெல்லலாம்!

Mar 11, 2025,11:01 AM IST

பிரதோஷ தினம் இன்று.. மார்ச் 11ஆம் தேதி, 2025 மாசி மாதம் 27 செவ்வாய்க்கிழமை வளர்பிறை  திரயோதசி திதி அன்று பிரதோஷ நாளாக  அனுஷ்டிக்கப்படுகிறது. பிரதோஷ வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான நிகழ்வாகும்.


இந்நாளில் சிவபெருமானையும், நந்திகேஸ்வரரையும் வழிபட்டால் அனைத்து பலன்களும், வளங்களும், நலங்களும் கிடைக்கும்


பிரதோஷம் என்பது சூரிய அஸ்தமனத்திற்கு 1.5 மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் வரும் மூன்று மணி நேரம் மங்களகரமான காலமாகும். ஒரு மாதத்தில் இரண்டு பிரதோஷங்கள்- ஒன்று வளர்பிறை பிரதோஷம் ,மற்றொன்று தேய்பிறை பிரதோஷம் ஆகும்.




இன்று மாலை நாலு முப்பது மணி முதல் 6 மணி வரை பிரதோஷமாக கருதப்படுகிறது. சமஸ்கிருதத்தில் 'ப்ர' என்றால் என்றால் நீக்குபவர் என்றும் தோஷம் என்றால் பாவம் ,தோஷம், கர்மா ,சர்வ தோஷங்களை நீக்குபவர் என்பது அர்த்தமாகும்.


ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதியில் வரும் மாலை நேரம் பிரதோஷ காலமாக வழிபாடு செய்யப்படுகிறது. சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது .உலக நன்மைக்காக ஆலகால விஷத்தை வலம்புரி சங்கில் அடக்கி ,அதை தானே  பருகினார் சிவபெருமான் .அதற்காக நன்றி செலுத்தும் வகையில் தேவர்கள் சிவபெருமானை வழிபட்ட நேரமே பிரதோஷ தினம்.


கோவில்களில் மாலை அந்தி நேரத்தில்    திரையோதசி திதி இருக்கும் நாளில் சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு பூஜை , அபிஷேகம்  தீப தூப ஆராதனை, நடைபெறும். இந்நாளில் நந்திகேஸ்வரரின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமான் திரு நடனம் புரிவதாக ஐதீகம்.


சிவாலயம் செல்பவர்கள் அபிஷேகப் பொருட்கள் வாங்கி செல்வது அதீத நன்மை பயக்கும் .

நெய் அபிஷேகம் செய்வதினால் முக்தி பேறு கிட்டும்.

பழங்கள் அபிஷேகம் செய்வதினால் விளைச்சல் பெருகும்.

பால் அபிஷேகம் செய்வதினால் நோய் தீரும்.

தயிர் அபிஷேகம் செய்வதினால் வளம் உண்டாகும்.

தேன் அபிஷேகம் செய்வதினால் இனிய சரீரம் கிட்டும்.

இளநீர் அபிஷேகம் செய்வதினால் நல்ல மக்கள் பேறு கிட்டும்.

பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்வதினால் செல்வம் பெருகும்.

மலர்கள் அபிஷேகம் செய்வதினால் தெய்வ தரிசனம் கிட்டும்.

சந்தனம் அபிஷேகம் செய்வதினால் சிறப்பான சக்தி உண்டாகும்.

சர்க்கரை அபிஷேகம் செய்வதினால் எதிர்ப்புகள் மறையும்.

நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வதினால் சுகவாழ்வு கிட்டும்.


பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவதால் பிரதோஷ வழிபாடு அதீத மகிமை உடையதாகும். இந்த வழிபாட்டினால் துன்பங்கள் நீங்கி செல்வங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.. உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்