- ஸ்வர்ணலட்சுமி
மார்ச், 26ம் தேதி.. இன்று National Spinach Day அதாவது தேசிய பசலைக் கீரை தினமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 26 அன்று "நேஷனல் ஸ்பினாச் டே "அதாவது "தேசிய கீரை தினம்" கொண்டாடப்படுகிறது. Boston Greens பாஸ்டன் கிரீன் என்று அழைக்கப்படும் ஸ்பினாச் ஊட்டச்சத்து நிறைந்தது. இது முதலில் பெர்சியாவில் இருந்து (ஈரான் என இப்போது அழைக்கப்படுகிறது) கீரை ஏழாம் நூற்றாண்டில் சீனாவிற்கு வந்தது .அங்கு மக்கள் "பெர்சியாவின் மூலிகை "அல்லது" பாரசீக பச்சை "என்று குறிப்பிட்டனர்.
ஸ்பினாச் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:
*ஸ்பினாச் ஆசியாவிலும் பாரசீக நாட்டிலும் தோன்றியது.
*இது போப் ஐ என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தினால் பிரபலமானது. ஏனெனில் ஸ்பினாச் உணவில் சேர்த்துக் கொள்வதனால் உடல் பலம் அதிகரிக்கும் என அந்த கார்ட்டூன் இல் காட்டப்பட்டது.
*ஸ்பினாச் உணவில் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்வதினால் கண் பார்வை மேம்படும்.
ஸ்பினாச் டே:
இந்த நாளை கொண்டாடுவதினால் கீரையின் முக்கியத்துவம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு தர ஏதுவாக இருக்கிறது .இதனை நாம் எப்படி கொண்டாட வேண்டும் என்றால் உணவில் பருப்புடன் கீரை கடையல் ,சூப் ,சாம்பார், கிரேவி ,பராதா ,ஜூஸ், பீட்சா போன்றவைகளில் ஸ்பினாச் பயன்படுத்தி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வீட்டுத் தோட்டத்தில் ஸ்பினாச் வளர்க்கலாம். மாடித்தோட்டத்தில் அப்பார்ட்மெண்ட்களில் இருப்பவர்கள் பால்கனியில் சிறிய தொட்டிகளில் வளர்க்கலாம். ஸ்பினாச் பற்றிய ஆரோக்கிய நன்மைகளை சமூக ஊடகங்களில் பகிரலாம்.
ஸ்பினாச் கீரை 'பசலைக்கீரை' என்று தமிழில் அழைக்கப்படுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகளை மக்களிடம் எடுத்துக் காட்டவும் ,இதன் அருமையான பயன்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ,இந்த ஸ்பினாச்டே கொண்டாடப்படுகிறது.
பயன்கள்:
1. இந்தக் கீரையில் வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து ,ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளது.
2. உடல்நலம் மேம்படவும், எலும்பு வலுப்பெறவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் ஸ்பினச் பயன்படுகிறது.
3.3 உடல் எடையை கட்டுப்படுத்த, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் மற்றும் டயாபடீஸ் இருப்பவர்களுக்கு ரத்த சர்க்கரை நிலையை சமநிலைப்படுத்த ஸ்பினாச் உதவுகிறது.
4. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்புக்கு உதவுகிறது.
5. போலிக் அமிலம், செல் செயல்பாடு மற்றும் திசு வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இது மிகவும் மென்மையான கீரை 6. சமைப்பதற்கு சிறிது நேரம் முன் கழுவி பிரஷ்ஷாக சமைப்பது அதீத நன்மை பயக்கும்.
7. இத்தனை பயனுள்ளது இந்த ஸ்பினாச் கீரை. இந்த ஸ்பினாச் டே மட்டுமல்லாமல் அடிக்கடி ஸ்பினாச் கீரை உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோமாக.
இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இணைந்திருங்கள்.. தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!