மார்ச் முதல் நாள்.. சிவனுக்கு ஏக வில்வம் சமர்ப்பித்து நவக்கிரக வழிபாடு செய்ய.. நலம் பெருகும்

Mar 01, 2025,12:21 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


இன்று மார்ச் மாத முதல் முதல் நாளான சனிக்கிழமை சிவாலயம் சென்று சிவனுக்கு ஏக வில்வம் சமர்ப்பித்து நவகிரங்களை தொழுது வர நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.


ஏக வில்வம் சிவார்ப்பணம் இதைப்பற்றிய விளக்கத்தை பார்ப்போம்


ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய வில்வாஷ்டகம்

திர தளம் திரிகுணாகரம்  

த் ரி நேத்ரம்  ச   த்ரியாயுதம் 

த் ரிஜென்ம பாப சம்ஹாரம் 

ஏக வில்வம் சிவார்ப்பணம்


இதன் பொருள்




மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம் மூலமென கோலம் தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம் ஏக வில்வம் சிவார்பணம் சகல பாப விமோசனம்!


சிவபெருமானை வழிபடுவதற்கு வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை இந்த வில்வத்தை பற்றி நாம் அறிந்துகொள்ள வில்வத்தை பற்றிய சிறப்புகளை பார்ப்போம் ஒவ்வொரு மாதம் வரும் சிவராத்திரி ,பௌர்ணமி, பிரதோஷ காலங்களில் சிவபெருமானுக்கு ஒரே ஒரு வில்வ இலை அதாவது ,மூன்று இலைகள் கொண்ட ஒரு கொத்து இதனைக் கொண்டு அர்ச்சனை செய்வது சிவபெருமானுக்கு உரிய சிறந்த வழிபாடு ஆகும்.


இவ்வுலகில் நன்மை தீமைகளை தெரிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் கிடைக்கும் பலன் என்பது ஒன்றுதான். இதை உணர்த்த ஒரு புராணக்கதை உண்டு. ஒரு வில்வ மரத்தின் மீது ஒரு குரங்கு அமர்ந்து இரவு முழுவதும் இலைகளை  ஒவ்வொன்றாக பிடுங்கி   கீழே போட்டு கொண்டு இருந்தது. ஆனால் அந்த வில்வ இலைகள் விழுந்தது லிங்கத்திருமேனிமீது. அன்றைய நாளோ சிவராத்திரி. இவ்வாறு குரங்கு அறியாமல் செய்த வில்வ அர்ச்சனைக்கு பலனாய் இறைவன் குரங்கை மறுபிறவியில் முசுக்குந்த சக்கரவர்த்தியாக பிறக்கச் செய்தார் என்பது புராணக்கதை.


முப் பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே புனிதம் எல்லாம் அள்ளித்தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்.

கோடி ஆ னை தான பலன், அஸ்வமேத யாகபாலன், சாளக்கிராமம் வணங்கும் பலன் ,சான்றோரை வணங்கும் பலன், பாடசாலை ஆலயங்கள் பல ஆயிரம் அமைப்பதனால் வருகின்ற பலன் ,அன்னதானம் பல ஆயிரமாய் செய்கின்ற ஜென்ம பலன் அளித்திடுமே ஓர் அர்ச்சனையில் ஓர் வில்வம்  சிவார்ப்பணம்.


இன்று மார்ச் மாதம் முதல் நாளான சனிக்கிழமையாக இருப்பதனால் சிவாலயம் சென்று ஏக வில்வம் சிவனுக்கு சமர்ப்பித்து, நவகிரகங்களை தொழுது வர நம் கஷ்டங்கள் தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.


மேலும் ஆன்மீகத் தகவலுக்கு இணைந்திடுங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்