- கோவை சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்
கருவை விதைத்தவன் தந்தை - எனினும்
கருவில் சுமப்பவள் தாய் - நம்மை
கருத்தாய் வளர்ப்பவள் தாய் - சிறந்த
கருணைத் தெய்வம் தாய் - பேசக்
கற்றுத் தருபவள் தாய் .
தாலாட்டில் துவங்கி இம்மொழி
தாயின் வழி வந்ததால் -அதனைத்
தாய்மொழி என்றழைத்தோம் -அதற்கு
தனிச்சிறப்பளித்தோம்.
தாய்மண் என்பதுவம் ,
தாய்நாடென்பதுவும் ,
தாய் மொழி என்பதுவும் - அந்தத்
தாய்க்குரிய பெருமையன்றோ.
மற்ற மொழிகள் பலவும்
மனம் விரும்பிக் கற்றாலும்
தாய்மொழிப் பண்டிதமே
தரணியில் உயர்வு தரும்.
ஏனைய மொழிகள் எல்லாம்
சுவை சேர்க்கும் பதார்த்தம் போல்,
தாய்மொழிதான் நமக்கு
பசி தீர்க்கும் சோறாகும் - நம்மைத்
தாங்கிடும் வேராகும் - அறிவுக்கு
அஸ்திவாரம் போலாகும்.
தாயின் சிறந்த கோயிலும் இல்லை
தாய்மொழிக்கிணை தரணியில் இல்லை.
தாய்மொழியை நேசிப்போம்.
தாய்மொழியை வாசிப்போம்.
தாய்மொழியை சுவாசிப்போம்.
தாய்மொழியை வணங்கிடுவோம்.
அவரவர் மொழி வளர்ப்போம்
அடுத்தவர் மொழி மதிப்போம்.
அனைத்து மொழிகளையும்
அரவணைத்துச் செல்வோம்.
அவரவர் ஊரில் பிழைக்க
அவரவர் மொழியே போதும்.
அனைத்துலகிலும் பழக
அன்னிய மொழிகளும் வேண்டும்.
மற்ற மொழிகள் மீது - அதீத
மயக்கம் கொள்ளாமல்,
தாய்மொழி பேசுதற்கு - சிறிதும்
தயக்கம் கொள்ளாமல்
தாய் மொழி சிறப்புணர்ந்து -அதனைத்
தரணியில் பரப்பிடுவோம் - அதையோர்
தவமாய்க் கொண்டிடுவோம்.
வாழ்க தாய்மொழி.
வளர்க தாய்மொழிப் பற்று
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!
அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?
தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்
இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா.. இன்று உயர்ந்த தங்கம் விலை எவ்வளவு தெரியுமா..?
நாகை டூ இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை.. இன்று முதல் தொடக்கம்..!
சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!
ஆர்யா, கௌதம் கார்த்திக்.. கூட்டணியில் உருவாகியுள்ள.. மிஸ்டர் எக்ஸ் படத்தின்.. டீசர் இன்று வெளியீடு..
கெஜ்ரிவால் ஆரம்பத்தில் நல்லாத்தான் இருந்தார்.. பிறகுதான் கெட்டுப் போய் விட்டார்.. அன்னா ஹசாரே
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 22, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}