மாத சிவராத்திரியும் பிரதோஷமும் ஒரே நாளில் ஒன்று இணைந்து வரும்.. குரு பிரதோஷ விரதம்!

Mar 27, 2025,12:40 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை:   குரு பிரதோஷ விரதம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.  மாத சிவராத்திரியும் பிரதோஷமும் ஒரே நாளில் ஒன்று இணைந்து வருவதால்  இந்நாள் குரு பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது.


குரு பிரதோஷ விரதம்:




ஓம் காசி லிங்கமே போற்றி!

ஓம் குரு லிங்கமே போற்றி! 

ஓம் கேதார லிங்கமே போற்றி ! 

ஓம் கைலாச லிங்கமே போற்றி! 

ஓம் கோடிலிங்கமே போற்றி ! 

ஓம் சக்தி லிங்கமே போற்றி! 

ஓம் சாந்தலிங்கமே போற்றி!

ஓம் தியானலிங்கமே போற்றி!

ஓம் சுயம்புலிங்கமே போற்றி ! 

ஓம் ஸ்வர்ணலிங்கமே போற்றி ! 

ஓம் சுந்தரலிங்கமே போற்றி!


மார்ச்- 27,  2025 வியாழக்கிழமை, பங்குனி 13. ஆம் நாள் மாத சிவராத்திரியும், பிரதோஷ விரதமும் ஒரே நாளில் அனுசரிக்கப்படுகிறது. இன்று தேய்பிறையில் வரும் இந்த மாத சிவராத்திரி பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.


இந்நாளில், சிவபெருமான் சிவலிங்கத்தில் வசிப்பதாக ஐதீகம். சிவ பக்தர்கள் பிரதோஷ விரதத்தையும், மாசிச் சிவராத்திரியையும் மிகவும் புனிதமாக கருதுகின்றனர் .இந்த வழிபாடு செய்வதினால் பொருள் நன்மைகளை தரும் என்றும் ,அனைத்து எதிர்மறைகளையும் நீக்குவதற்காக பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.


பங்குனி மாதம் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி மிகுந்த விசேஷம். இது மகா சிவராத்திரிக்கு அடுத்த முக்கியமான சிவராத்திரி ஆகும். இன்றைய நாளில் சிவலிங்கா அபிஷேகம், பஞ்சாட்சர மந்திரம் (ஓம் நமசிவாய )ஜெபம் நோன்பு இருப்பது அதீத நன்மை நல்கும்.


பிரதோஷம் என்பது மாலை நேரத்தில்4:30   மணி முதல் 6:30  மணிக்குள் சிவபெருமான் மற்றும் நந்தியையும் வழிபடுவதற்கான சிறப்பு நேரமாகும். பிரதோஷ விரதம் கடைபிடிக்கும் போது சிவபெருமான் சந்திரமவுலீஸ்வர கோலத்தில் காட்சியளிக்கிறார்.


இந்த நாளில் வில்வ அர்ச்சனை செய்து வில்வாஷ்டகம் படிக்க நீண்ட ஆயுள் கிடைக்கும். *குடும்ப அமைதி நிம்மதி கிட்டும்.*பாவங்கள் நீங்கி நன்மை பெருகும். படிக்கும் குழந்தைகள் பொதுத்தேர்வு எழுதும் குழந்தைகள் வீட்டில் இருப்பவர்கள் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அவர்களுக்கு புத்தி கூர்மை மேலும் தேர்வில் நன் மதிப்பெண் பெற உறுதுணையாக இருக்கும்.


*  திருமண தடை நீங்கி வாழ்க்கையில் திருமண யோகம் கைகூடும்.

* புத்திர பாக்கியம் கிடைக்கவும் இந்த வழிபாடு உற்றத் துணையாக இருக்கிறது.


இத்தனை மகிமை வாய்ந்த குரு பிரதோஷ விரதம் இருந்து வாழ்வில் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வோமாக! வாழ்க வளமுடன். மேலும் இது போன்ற ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்