சென்னை: உங்கள் அன்பானவரிடம்.. உங்கள் காதலை வெளிப்படுத்த.. பிளான் போட்டு இருக்கீங்களா.. அப்ப இன்னைக்கே போய் சொல்லுங்க.. அதுக்கான தினம்.. தான் இன்று!
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14ஆம் தேதியை காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். காதலர் தினத்திற்கு முன்பு ஒருவார காலத்திற்கு ஒவ்வொரு தினமாக தினசரி கொண்டாடப்படுவது வழக்கம்.
பிப்ரவரி 7 ரோஸ் டேவில் துவங்கி, இன்று பிப்ரவரி 8ஆம் தேதி புரபோசல் டே கொண்டாடப்படுகிறது. அடுத்து நாளை சாக்லேட் டே, 10ம் தேதி டெட்டி டே, 11ம் தேதி பிராமிஸ் டே, 12ம் தேதி ஹக் டே 13ம் தேதி முத்த தினம், 14ம் தேதி காதலர் தினம்.. இதை கொண்டாடுகிறார்கள்.
இந்த வாரம் முழுக்க காதலைச் சொல்லி இணைய பலரும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் வாழ்வின் துணையைத் தேடுபவர்கள் மட்டுமல்லாமல், ஏற்கனவே துணையில் உறுதியானவர்களும் இந்த வாரத்தை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
புரபோஸ் தினமான இன்றைய தினத்தில் காதலை வெளிப்படுத்த உற்சாகத்துடன் உலகெங்கும் கொண்டாடி வருகிறார்கள் காதலைச் சொல்லும் இளைஞர்களும், பெண்களும். உங்கள் மனதை கவர்ந்த உங்கள் துணையை தேடி விட்டீர்களா.. அல்லது ஏற்கனவே உறுதியாகி விட்டதா ..அப்படி இருப்பவர்கள் உங்கள் அன்பு கனிந்த காதல் உணர்வுகளை வெளிப்படுத்த திட்டமிட்டு இருந்தால் அவர்களுக்கான அழகான தருணம் இன்று!
நேசிக்கும் பெண் அல்லது ஆணிடம், மனசுக்குள் பூத்துக் குலுங்கும் காதலை எப்படி சொல்வது என்று எல்லோருக்கும் ஒரு தயக்கம் இருக்கும். கடலைக் கூட ஈஸியா கடந்து விடலாம் போல.. ஆனால் இந்த லவ்வை சொல்றப்ப வருகின்ற பயம் இருக்கே.. அதை சொல்லவே முடியாது.. வார்த்தையும் வராது.. காதல் வந்துட்டா அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில் சொதப்பல்கள்தான் அதிகமாக இருக்கும். அப்படி சொல்லி தப்பா போச்சுன்னா என்ன செய்றது என்ற டென்ஷன் தான் அதிகமாகும். அதற்காக ஒவ்வொரு லவ்வரும் தன் காதலியிடம் சொல்ல போகும் அந்த அழகான தருணத்தை நம் வாழ்வில் என்றுமே மறக்க முடியாது. அப்படி ஒரு காதலன் ஒரு காதலியிடம் தன் காதலை வெளிப்படுத்தும் அழகான தருணம் இன்று!
எப்படி ப்ரபோஸ் பண்ணனும் என்று முதல்ல பிளான் போடணும். காதலிக்கு என்ன பிடிக்கும்.. என்ன பிடிக்காது.. பூ பிடிக்குமா.. கவிதை பிடிக்குமா.. உரைநடையில் எழுதி கொடுத்தா பிடிக்குமா.. என பல வகையில் முன்னாடியே ரூம் போட்டு யோசிப்பவர்கள்தான் அதிகம்.
நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டு சொல்ற நேரம் வந்ததும்.. எப்படிடா சொல்றது.. என்ன சொல்றது.. அப்படின்னு கை, கால்லாம் உதர ஆரம்பிக்கும்.. பயம் கழுத்தை நெரிக்கும்.. மனம் படப்பட வென்று துடிக்கும் பாருங்க.. ஒரே டென்ஷனா இருக்கும். அதைப் பலரும் கடந்து வந்திருப்பார்கள். உங்களை கிண்டல் பண்ணாத பிரெண்ட்ஸ் இருக்க முடியுமா.. அந்த அளவுக்கு நம்மள நல்லா வச்சு செய்வாங்க. இதையெல்லாம் சமாளிச்சு காதலன் தன் காதலியிடம் அந்த ஐ லவ் யூ என்ற மூன்று வார்த்தையை சொல்லும்போது உள்ளுக்குள் வெடிக்கும் உணர்வுகள் இருக்கே.. அடிவயிற்றிலிருந்து அப்படி கொப்பளித்துக் கொட்டும் உணர்வுகளை வடிக்க வார்த்தையே கிடையாது..அந்த உணர்வை எதனாலும் ஈடு கட்டவும் முடியாது. அது ஒரு அழகான தருணம். நம் மனதில் ஆயிரம் பூ பூத்தது போல ..ஒரு சந்தோஷம்.. மகிழ்ச்சி!
காதலை சொல்லும்போது பெண்கள் கோபம் காட்டினால்.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு ஒரு வார்த்தை சொன்னால் போதும். குடை மிளகாய் போல மூக்கு விடைக்க கோபம் கொப்பளித்துக் கொண்டிருக்கும் பெண்களின் முகத்தில் குபுக்கென்று வெட்கம் வந்து தலை குனிந்து சிரிப்பாங்க பாருங்க... அங்கேயே நீங்க ஜெயிச்சுட்டீங்க பாஸு!
இன்னும் என்னங்க லேட் பண்ணிட்டு.. சட்டுப்புட்டுன்னு கிளம்புங்க.. பிடிச்சவங்க கிட்ட தைரியமா போய் புரபோஸ் பண்ணுங்க.. வாழ்த்துக்களை சொல்லுங்க.. அவர்களுக்கு பிடித்த கவிதைகள் சொல்லுங்க. இல்ல பரிசு கொடுங்கள்.. அப்பறம் என்ன சக்சஸ் தான்.. பயம் இல்லாமல் உங்க துணையிடம் போய் ப்ரொபோஸ் பண்ணுங்க.. வாழ்த்துகள்ங்க!
இன்று புரபோஸ் செய்யப் போகும் அனைவருக்கும்.. நேசம் தழைத்தோங்க வாழ்த்துகள்!!
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}