Easter: சீஷர்கள் அவரைப் பணிந்து கொண்டனர்.. அவர் அவர்களை நோக்கி இப்படிச் சொன்னார்!

Mar 31, 2024,11:27 AM IST

உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கியத் திருநாள் ஈஸ்டர்.. இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார். அந்த நாளைத்தான் நாம் ஈஸ்டராக கொண்டாடுகிறோம்.


கிறிஸ்து இயேசு, சகல ஜனங்களின் பாவங்களுக்காகவும் சிலுவையில்  அறையப்பட்டார். மற்றவர்களின் பாவங்களுக்காக தன் உயிரைக் கொடுத்தவர் அவர். அவர் மரிப்பதற்கு முன்பு நான் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்றார். அதை அப்போது யாருமே நம்பவில்லை, நம்பிக்கையும் இல்லை. பலர் இயேசுவின் கதை இத்தோடு முடிந்தது என்று தான் நினைத்தார்கள்.


ஆனால் இயேசு தான் சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்தபின் அவருடைய சீஷர்களுக்கு தரிசனமானார். சீஷர்கள் அவரைப் பணிந்துகொண்டார்கள்.. அத்தனை பேரும் வியப்பில் மூழ்கிக் கிடந்தனர். அவர்களால் நம்பவே முடியவில்லை.. ஆனால் தேவ குமாரன் தங்கள் முன்பு தோன்றியதைக் கண்டு அவர்கள் நெக்குருகி நின்றார்கள்.. வணங்கிப் பணிந்தார்கள்.




அப்போது அவர் அவர்களை நோக்கி:  நான் உங்களுக்குக் கட்டளையிட்ட நல் உபதேசங்கள் யாவையும் சகல ஜனங்களும் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் கொடுங்கள். நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்.


என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். 


பஸ்கா என்னும் பண்டிகை நாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று திரளான ஜனங்கள் கண்டு, ஓசான்னா... ஓசான்னா.... என்று ஆர்ப்பரித்தார்கள். ஓசான்னா என்றால் (கர்த்தருடைய  நாமத்தினாலேவருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்தரிக்கப்பட்டவர்)  இதுவே ஈஸ்டர் தினமாக கொண்டாடப்படுகிறது.


சரி ஈஸ்டர் என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா.. ஆஸ்டர்ன் என்ற ஜெர்மன் மொழி வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் ஈஸ்டர் என்பதாகும். நிலையில்லாத பிறப்பு என்பது இதன் பொருளாகும். அதேபோல இயோஸ்டர் அல்லது ஈயோஸ்டர் என்ற வார்த்தையிலிருந்து ஈஸ்டர் என்ற வார்த்தை வந்ததாகவும் இன்னொரு கருத்து உண்டு. இயோஸ்டர் என்பது ஆங்கிலோ - சாக்ஸோன் பெண் கடவுள் ஆகும்.  கிட்டத்தட்ட இன்று இயேசுநாதரின் பிறப்பாகவும் பார்க்கப்படுகிறது என்பதால் இந்த வார்த்தையை இந்த நாளுக்கு பயன்படுத்த ஆரம்பித்ததாகவும் ஒ  ரு வரலாறு உண்டு.


ஈஸ்டர் என்றதுமே நமக்கு அடுத்து நினைவில் வருவது அலங்கரிக்கப்பட்ட முட்டைகள்தான். அந்தக் காலத்தில் ஈஸ்டர் என்பது வசந்த காலத்தை வரவேற்கும் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட  முட்டைகளை பொது இடங்களில் மறைத்து வைத்திருப்பார்கள். அதை சிறு பிள்ளைகள் போய் கண்டுபிடித்து எடுத்து வர வேண்டும். அந்த முட்டைகளுக்குள் பரிசுப் பொருட்கள் மறைந்திருக்கும். இப்படித்தான் ஈஸ்டருக்கும், முட்டைகளுக்கும் தொடர்பு ஏற்பட்டது.


உலகம் முழுவதும் அமைதி தவழ வேண்டும், அனைவரது மனங்களிலும் நிம்மதி நிலவ வேண்டும், ஒற்றுமை பெருக வேண்டும் இந்த ஈஸ்டர் நாளில் அதற்கு நாம் உறுதி ஏற்போம், அதற்காக பாடுபடுவோம்.. நமக்காக தன்னையே வருத்திக் கொண்ட தேவனை நினைத்து வணங்குவோம்.


கட்டுரை: பாத்திமா மேரி

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்