தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 27 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
இரவு 8.47 வரை துவாதசி, பிறகு திரியோதசி. இரவு 7.17 வரை திருவாதிரை நட்சத்திரமும், பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 7.30 முதல் 08.30 வரை; மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
இன்றைய ராசிபலன் :
மேஷம் - வியாபாரம் தொடர்பாக அலைகள் ஏற்படும். இணைய துறைகளில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். சூழ்நிலை அறிந்து முடிவுகள் எடுக்க வேண்டும். தம்பதிகளிடையே ஒற்றுமை பலப்படும். உடல் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம் - உங்களுக்கு கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆதரவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். தொழில் சிறக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்வு நிறைநாத நாளாக இருக்கும்.
மிதுனம் - மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத சந்திப்புக்களால் மாற்றம் ஏற்படும். மனதில் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். எதிலும் பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணிகள் காரணமாக அலைச்சல்கள் ஏற்படும்.
கடகம் - எதையும் சமாளிக்கும் தைரியம் ஏற்படும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். தடைபட்ட காரியங்கள் கை கூடும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் இருந்து வந்த நெருக்கடியான சூழல் மாறும். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம் - எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த காரியங்களை முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். கடன் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
கன்னி - உறவுகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வேலைகளில் சில நுட்பங்களை தெரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணை வழியில் ஆதாயம் ஏற்படும். வியாபாரத சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் ஆதரவுகள் பெருகும்.
துலாம் - விலகி சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் உருவாகும். நீண்ட தூர பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.முதலீடுகள் மூலம் லாபங்கள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
விருச்சிகம் - மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை காணாமல் இருக்க வேண்டும். வியாபாரத்தில் சிந்தித்து முடிவுகள் எடுக்க வேண்டும். மறைமுக தடைகளால் பணிகள் தாமதப்படும். வாகனங்களால் செலவுகள் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பல விதமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும்.
தனுசு - குடும்பத்தில் மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். போட்டிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். முக்கிய விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
மகரம் - குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகள் தீரும். விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் முக்கிய முடிகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம் - நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். பொழுது போக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். புதிய ஆசைகள் தோன்றும். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.
மீனம் - உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு பணிகளில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னையில்.. இரண்டே முக்கால் மணி நேரம் விஜய்யுடன் தீவிர ஆலோசனை நடத்திய.. பிரஷாந்த் கிஷோர்!
டெல்லி முதல்வராக மீண்டும் ஒரு பெண்.. பாஜகவின் திட்டம் இதுதான்.. பதவியேற்பு விழா எப்போது?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தில்.. நாளை தொடங்கி.. 3 நாட்கள் விறுவிறு ஜல்லிக்கட்டு!
பெரியாரை ஏற்க மாட்டேன்.. இப்பதான் தொடங்கியுள்ளேன்.. போகப் போக நிறைய உள்ளது.. சீமான்
ரேஸ் டீம் பெண்ணின் ஷூ லேஸை கட்டி விட்ட அஜீத் குமார்.. அஜீத்தே அஜீத்தே.. கொண்டாடும் ரசிகர்கள்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி.. சென்னையில் விரைவில் போராட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
சொத்தைப் பிரித்துத் தராத தொழிலதிபர் தாத்தா.. 73 தடவை கத்தியால் குத்திய கொடூர பேரன்!
ஈரோடு கிழக்குத் தொகுதி..எம்எல்ஏவாக பதவியேற்றார் விசி சந்திரகுமார் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
{{comments.comment}}