12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 31, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Jan 31, 2025,10:19 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், தை 18 ம் தேதி வெள்ளிக்கிழமை

மாலை 04.30 வரை துவிதியை, பிறகு திரிதியை. காலை 08.07 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை 

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். இருந்தாலும் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும். பணியிடத்தில் வேலை சுமை அதிகரிக்கும். வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றி அடையும். அன்புக்குரியவர்களின் ஆதரவு மனதிற்கு ஆறுதலை தரும். 


ரிஷபம் - புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். இருந்தாலும் நம்பிக்கை இல்லாமல் காணப்படுவீர்கள். பாதியில் நின்ற பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். நல்ல செய்திகள் தேடி வரலாம். பயணங்களால் ஆதாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். 


மிதுனம் -    மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். நம்பிக்கை குறைந்து காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்விற்காவ வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.


கடகம் -   குடும்பத்துடன் ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும்.


சிம்மம் -   தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வாகன பயணத்தில் கவனம் தேவை. காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


கன்னி -  மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாப வாய்ப்புகள் அமைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். எடுக்க முயற்சிகளுக்கான பலன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


துலாம் -   மன அழுத்தத்தை உணர்வீர்கள். உத்தியோக மாாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. முன்னேற்ற வாய்ப்புகள் ஏற்படும். வருமானம் அதிகரிக்கலாம். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வரும். வாழ்க்கையின் ஆதரவு புதிய நம்பிக்கையை கொடுக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும்.


விருச்சிகம் -  தேவைகள் நிறைவேறும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். தொழில் நிலை மேம்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் லாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


தனுசு -  மனதில் பதற்றம் அதிகரிக்கும். அறிவு சார்ந்த வேலைகளில் மரியாதை அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். புதிய அனுபவங்கள் ஏற்படலாம். பெற்றோர் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். எழுத்து சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.


மகரம் -  சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். பெற்றோரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சுப நிகழ்வுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உயர்வு ஏற்படும். பணவரவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.


கும்பம் -   கனமுடன் இருக்க வேண்டிய நாள். அன்புக்குரியவர்கள் துணையாக இருப்பார்கள். வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வேலை தொடர்பாக வெளியூர்களுக்கு பயணம் செய்வீர்கள். நட்பு வட்டம் விரீவடையும்.


மீனம் -   அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. அன்புக்குரியவர்களின் ஆதரவால் மனம் மகிழ்ச்சி அடையும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் 3வது மேடைப் பேச்சு... என்னாவா இருக்கும்?.. ஆர்வத்தில் மக்கள்

news

தொகுதி மறுசீரமைப்பால் ஆபத்து.. மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

100 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் விலை.. நம்ம அப்பத்தாக்கள் கொடுத்து வைத்தவர்கள்!

news

குடையோடு போங்க மக்களே.. தமிழ்நாட்டில் பிப் 27,28 மார்ச் 1.. ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!

news

Venjaramoodu Mass murder: மாமா, அத்தை, தம்பி, காதலி, பாட்டி.. 5 பேரை கொன்ற சைக்கோ இளைஞர்!

news

மத்திய அரசிடம் ஈகோ பார்க்கிறது மாநில அரசு: பாஜக மூத்த தலைவர் தமிழிசை

news

தமிழ்நாடு முழுவதும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக.. மத்திய அரசை கண்டித்து திமுக மாணவர் அணி போராட்டம்!

news

உங்களுக்கு பிபி இருக்கா.. ரொம்ப டென்ஷனா இருக்கா?.. அப்படீன்னா இதையெல்லாம் மறக்காம பண்ணுங்க!

news

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு.. இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில் புதிய பயணம்..ரஞ்சனா நாச்சியார்

அதிகம் பார்க்கும் செய்திகள்