தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மாசி 16 ம் தேதி வெள்ளிக்கிழமை
கரிநாள். காலை 07.17 வரை அமாவாசை, பிறகு பிரதமை திதி உள்ளது . மாலை 03.04 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.28 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். ,உழைப்பிற்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். காரியங்களில் தாமதங்கள் ஏற்படும்.
ரிஷபம் - சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர்களின் சந்திப்புகள் ஏற்படும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். திடீர் வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். அவசர முடிவுகளை தவிர்க்க வேண்டும். பணியாளர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். பணவரவு திருப்தியாக இருக்கும்.
மிதுனம் - எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மாற்றம் தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். புதுமையான செயல்களில் ஆர்வம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். பாராட்டுக்கள் கிடைக்கும்.
கடகம் - திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்புகளை சமாளிப்பீர்கள். உடல் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணிகளின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிம்மம் - மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். தவறிப் போன சில பொருட்கள் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளியூரில் இருநந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புகழ் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கன்னி - எடுத்துச் செல்லும் பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரப் பணிகளில் வசதிகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறையில் புதிய அனுபவம் கிடைக்கும். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். புத்திசாலித்தனத்தால் லாபம் அதிகரிக்கும்.
துலாம் - சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உறவுகள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மற்றவர்கள் பற்றி கருத்துக் கூறுவதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்கள் மூலம் தொழில் முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம் - தாயின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் கை கூடுவதற்கான சூழல்கள் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திருப்தி ஏற்படும். செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும்.
தனுசு - கடன் விஷயத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். தள்ளிப் போன சில காரியங்கள் முடியும். மறைமுக திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். சவாலான செயல்களை செய்வீர்கள். அக்கம் பக்கத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். பயம் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
மகரம் - எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்த கொள்ள வேண்டும். மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். சவாலான சில சூழல்களை எதிர்கொள்ள வேண்டி வரும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு ஏற்றபலன் கிடைக்கும்.
கும்பம் - முன் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எதையும் பலமுறை யோசித்து செய்ய வேண்டும். வியாபாரத்தில் சில புதிய விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
மீனம் - பணிகளில் சில எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். தொழில் ரீதியான நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. மனதில் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். எதிலம் கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}