தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 13 ம் தேதி சனிக்கிழமை
சனி மகா பிரதோஷம். அதிகாலை 02.41 வரை துவாதசி, பிறகு திரியோதசி. இரவு 10.54 வரை அனுஷம், பிறகு கேட்டை நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் மாலை 3 வரை
சந்திராஷ்டமம் - அஸ்வினி, பரணி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - எதிலும் ஆர்வம் இல்லாமல், மனம் விரக்தியாக இருக்கும். கொடுக்கல், வாங்கலில் பொறுமையாக இருக்க வேண்டும். வாகன பயணங்களின் போது நிதானம் தேவை. எளிதில் முடியும் என எதிர்பார்த்த விஷயங்கள் கடைசி நிமிடத்தில் தாமதப்படலாம். அதற்காக அலைச்சலும் அதிகரிக்கும்.
ரிஷபம் - உத்தியோத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபங்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரலாம்.
மிதுனம் - எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்காலம் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியங்கள் கை கூடும். அடுத்தவர்களின் பேச்சுக்களை நம்பி எந்த முடிவையும் எடுக்காதீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.
கடகம் - தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிகளில் சவால்களை சந்திக்க நேரிடும். சுபகாரிய பேச்சுக்கள் சாதகமாக முடியும். வியாபாரத பணிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம் - ஆரோக்கியம் தொடர்பான புதிய ஆலோசனைகளை பெறுவீர்கள். மனை தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். அலுவலகத்தில் சாதமான சூழல் ஏற்படும். அரசு பணிகளில் லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
கன்னி - திட்டமிட்ட பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். வாகன மாற்றம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். தொழிலில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மறைமுக திறைமகள் வெளிப்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். முயற்சிக்கு ஏற்ற சாதகமான பலன்கள் கிடைக்கும்.
துலாம் - உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். செயல்பாடுகளில் இருந்து வந்த மந்தத்தன்மை மாறும். எதிர்பாராத சில உதவிகளும், அதன் வழியாக மகிழ்ச்சியான செய்திகளும் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்களின் கருத்துக்களுக்கு மற்றவர்களிடம் மதிப்பு அதிகரிக்கும்.
விருச்சிகம் - யாரையும் நம்பி எந்த வாக்குறுதிகளையும் அளிக்காதீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிலும் கோபத்தை குறைத்து, பொறுமையுடன் செயல்பட வேண்டும். வர்த்தம் தொடர்பான பணிகளின் வேகத்தை விட விவேகம் அவசியம்.
தனுசு - மறைமுக எதிர்புகள் மூலம் செயல்களில் இழுபறி தன்மை இருக்கும். வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும்.
மகரம் - சுப காரிய எண்ணங்கள் கைகூடும். பண வரவுகளால் சேமிப்புக்கள் அதிகரிக்கும், வெளியூர் பயணங்களில் சாதகமான பயன்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த வந்த குழப்பம் நீங்கும். இணைய துறைகளில் வாய்ப்புகள் கிடைக்கும். கவலைகள் தீரும் நாள்.
கும்பம் - மனதில் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதிகாரிகளின் மறைமுக ஆதரவு ஆறுதலை தரும். குழப்பங்கள் நீங்கும்.
மீனம் - உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருகு்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர்கள். உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு ஆதரவாக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். எதிர்பார்த்த உதவிகளை பெறுவதில் அலைய வேண்டி இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
1 கிலோ பச்சரிசி.. 1 கிலோ சர்க்கரை.. கரும்பு.. பொங்கல் பரிசுத் தொகுப்பு ரெடி.. ஜன. 9 முதல் டோக்கன்!
அன்புமணியுடன் திடீர் மோதல்.. பேச்சைக் கேட்காட்டி வெளியேறி விடு.. கொந்தளித்த டாக்டர் ராமதாஸ்!
பாமக மேடையில் வெடித்த திடீர் வாக்குவாதம்.. டாக்டர் ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு இதுதான் காரணமா?
Panaiyur Poltics: தமிழக அரசியலில் முக்கிய இடத்தை பிடிக்கும் பனையூர்... நேற்று விஜய்.. இன்று அன்புமணி
Anna university: அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்த.. ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. மாணவிக்கு ரூ. 25 லட்சம் நிவாரண உதவி அளிக்க ஹைகோர்ட் உத்தரவு
திருவண்ணாமலையில் கொடுமை.. முக்தி அடைவதற்காக.. விஷம் அருந்தி வாழ்க்கையை முடித்த 4 பேர்!
New year 2025.. டிசம்பர் 31ம் தேதி வண்டலூர் ஜூவுக்கு ஜாலியா போய்ட்டு வாங்க.. லீவு கிடையாது!
Dr Manmohan Singh.. மன்மோகன் சிங்குக்கு ஆயிரக்கணக்கோனார் இறுதி அஞ்சலி.. டெல்லியில் உடல் தகனம்
{{comments.comment}}