தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு மார்ச் 28 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், பங்குனி 14 ம் தேதி வெள்ளிக்கிழமை
இரவு 07.24 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. இரவு 09.44 வரை பூரட்டாதி நட்சத்திரம், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். சிலரின் சந்திப்புக்களால் மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சரி செய்யும் எண்ணம் தோன்றும். தொழிலில் கவனம் வேண்டும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும்.பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
ரிஷபம் - இழுபறியான பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுக்களில் சாதகமான முடிவு கிடைக்கும் வெற்றியான நாள்.
மிதுனம் - குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீர் பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுப காரிய எண்ணங்கள் கை கூடும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் உதவிகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாளாக இருக்கும்.
கடகம் - எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்படையும். பழைய கடன்களை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சில சலசலப்புகள் வந்து போகும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சொத்து விஷயங்களில் பொறுமை அவசியம். செலவு நிறைந்த நாளாக இருக்கும்.
சிம்மம் - மனதில் இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் தேவை. விவாதங்களை தவிர்க்கவும்.
கன்னி - புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களில் எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை தரும்.
துலாம் - உத்தியோகத்தில் உயர்வான சூழ்நிலைகள் ஏற்படும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த புரிதல்கள் ஏற்படும். பாராட்டுக்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும்.
விருச்சிகம் - நண்பர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வேலைகளில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
தனுசு - புதிய மனை, வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான எண்ணங்கள் அதிகரிக்கும். புதுவிதமாக சிந்தித்து இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். நிதானம் வேண்டிய நாள்.
மகரம் - இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் நினைத்ததை செய்த முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி கிடைக்கும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
கும்பம் - திடீர் வரவுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பொருளாதார உயர்வால் வாழ்க்கை தரம் உயரும். வீண் செலவுகள் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். எதிர்கால முதலீடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து செல்வதால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
மீனம் - அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயணங்களில் புதுமையான அனுபவம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். சுகம் நிறைந்த நாளாக இருக்கும்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}