12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 27, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Jan 27, 2025,10:18 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜனவரி 27 ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், தை 14 ம் தேதி திங்கட்கிழமை

சோமவார பிரதோஷம், மாத சிவராத்திரி. இரவு 08.29 வரை திரியோதசி, பிறகு சதுர்த்தசி. காலை 08.55 வரை மூலம் நட்சத்திரமும், பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 08.55 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 01.30 முதல் 02.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை 

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - கிருத்திகை, ரோகிணி


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  சுறுசுறுப்பான நாளாக இருக்கும்.வாழ்க்கையில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ஆனால் பண விஷயங்களில் புத்திசாலித்தனமாக நிர்வகிக்க வேண்டும். தேவைப்பட்டால் அனுபவசாலிகளின் ஆலோசனையை பெற வேண்டும். தொழில் நன்றாக இருக்கும். இலக்குகளை நோக்கி முன்னேற முயற்சி செய்வீர்கள்.


ரிஷபம் - இனிமையான நாளாக இருக்கும். வாழ்க்கையில் பாசிட்டிவாக உணர்வீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய சிந்தனைகள் வந்து சேரும். வேலைகளில் புதுமையை கொண்டு வர நினைப்பீர்கள். பயணங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும்.


மிதுனம் -   முதலீடுகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். வெற்றியை அடைய கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலில் முயற்சி அதிகப்படுத்த வேண்டும். குடும்பத்துடன் நேரத்தில் செலவிடுவீர்கள் வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவதால் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.


கடகம் -  பண விஷயங்களில் முடிவெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். வெற்றியை அடைய கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும்.


சிம்மம் -  சேமிப்பை அதிகப்படுத்த செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். எதிலும் நேர்மையாக நடந்து கொள்வது நன்மையை அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீட்டில் கலகலப்பான சூழல் நிலவும். விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.


கன்னி -  தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் செய்ய நினைப்பீர்கள். செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் வெற்றியை அடைய தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்க குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.


துலாம் -  ஆரோக்கியத்தை பாதுகாக்க வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான சூழல் நிலவும். மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள் பயண வாய்ப்புகள் இனிமையாகும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.


விருச்சிகம் -  பணத்தை கவனமாக கையாள வேண்டும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு உறவினர்களை சந்திக்கலாம். வீட்டை சீரமைக்க நினைப்பீர்கள். புதிய சொத்து வாங்க திட்டமிடுவீர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நல்லது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


தனுசு -  தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். முதலீடுகள் நல்ல வருமானத்தை தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பயணத்தில் கவனம் அவசியம். வாழ்க்கைத் துணையின் மீது அன்பு அதிகரிக்கும்.


மகரம் -  பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும்.அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. கோபத்தை தவிர்க்க வேண்டியது நல்லது. பேச்சுக்களில் நிதானம் வேண்டும். திடீர் பயணங்கள் ஏற்படும்.சட்ட விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.


கும்பம் -  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பண விஷயத்தில் புதிய யுத்தியை கையாளுவீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். 


மீனம் -  சவால்கள் இருந்தாலும் தொழில் நன்றாக இருக்கும். புதிய வாய்ப்புகள் அமையும். பணத்தை சேமிக்க திட்டமிடுவீர்கள். மற்றவர்களின் உதவியால் சவால்களை சமாளிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திடீர் பயணங்கள் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் அன்பை அதிகரிக்க மனம் விட்டு பேசுவது நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

news

நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி

news

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!

news

ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!

news

இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!

news

சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!

news

பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்