தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 12 ம் தேதி வெள்ளிக்கிழமை
அதிகாலை 01.00 வரை ஏகாதசி, பிறகு துவாதசி. இரவு 09.04 வரை விசாகம், பிறகு அனுஷம் நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.15 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணிகளில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம். பண விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடனான அன்பு அதிகரிக்கும்.
ரிஷபம் - மன நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். சுற்றி உள்ளவர்களின் நலன்களில் அக்கறை காட்டுங்கள். மதியம் வரை நிதி நிலையில் சிக்கல்கள் ஏற்படலாம். பிறகு சாமர்த்தியமாக பணத்தை கையாண்டு நிலைமையை சமாளிப்பீர்கள். எதையும் பெரிதாக யோசித்து மனஅழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம்.
மிதுனம் - நீங்கள் எடுக்கும் முடிவுகள், வகுக்கும் திட்டங்கள் வெற்றிகளை கொடுக்கலாம். சில வாய்ப்புகள் தேடி வரலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது சில சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். செலவுகளில் கவனமாக இருங்கள். எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது.
கடகம் - வாழ்க்கை துணையின் விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். அலட்சியம் செய்யாமல் உரிய மருத்துவத்தை எடுத்துக் கொள்வதால் மருத்துவ செலவுகளை குறைக்கலாம். வாழ்க்கை துணைக்காக நேரம் ஒதுக்குவதால் அன்பு பலப்படும்.
சிம்மம் - வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண விஷயங்களில் சில சாதகமான முடிவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சி, பணியிடத்தில் பணி உயர்வு கிடைக்க சற்று கால தாமதம் ஏற்படலாம். நிதானமான பேச்சுக்கள் சாதமான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
கன்னி - மங்களகரமான நாளாக இருக்கும். மாற்றங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பண வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். திடீரென நண்பர் ஒருவரை சந்திக்க நேரிடலாம். எந்த பிரச்சனையையும் நாளை என தள்ளிப் போடாமல் இன்றே தீர்வு காண முயற்சி செய்யுங்கள். உங்களின் திட்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
துலாம் - மாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்கும். சொந்தங்கள் வழியில் சில சிரமங்கள் ஏற்படலாம். காதல் விவகாரங்களில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம் - வெற்றிகள் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சி மற்றும் சவால்கள் இரண்டு கலந்து வரலாம். எதையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருங்கள்.
தனுசு - செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி செய்வீர்கள். பண விஷயங்களில் அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் தேடி வரும். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.
மகரம் - தகுதியை நிரூபிக்க அதிகம் போராட வேண்டி இருக்கும். பண வரவு, உடல்நிலை ஆகியவை நன்றாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவதால் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். மனதில் அதிகமான குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் - சந்தேக போக்கை கைவிட்டு, எதையும் எளிதில் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களை திறமையை நிரூபிக்க வாய்ப்புகளை தேட முயற்சி செய்வீர்கள். பண வரவில் சிக்கல்கள் இருக்கும். உடல்நிலை சீராக இருக்கும். உணவு பழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம் - உற்சாகமான வாய்ப்புகள் தேடி வரும். மன ஆரோக்கியத்தை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். வரும் வாய்ப்புகளை கவனமாக பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். எதிலும் நிதானமாகவும், கவனமாக செயல்படாவிட்டால் வாய்ப்புகள் கை நழுவிச் செல்ல வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}