தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ம் தேதி, வியாழன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 11 ம் தேதி வியாழன்கிழமை
நாள் முழுவதும் ஏகாதசி திதி உள்ளது. மாலை 06.51 வரை சுவாதி, பிறகு விசாகம். காலை 06.25 வரை சித்தயோகம், பிறகு மாலை 06.51 வரை அமிர்தயோகம், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.15 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - புதிய வாய்ப்புகள் தேடி வரும். முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். மாற்றங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. இலக்குகளில் அதிக கவனம் செலுத்துவதால் முன்னேற்ற முயற்சிகளில் வெற்றி பெற முடியும்.
ரிஷபம் - நன்மைகள் அதிகம் நடைபெறும் நாளாக இருக்கும். பல வழிகளிலும் பணம் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சிலர் வீண் வம்புகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. எதிலும் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடாமல் இருப்பது நல்லது.
மிதுனம் - கடின உழைப்பின் மூலம் பலனடைய வேண்டிய நாள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. பேச்சுக்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கடகம் - நம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் எதிலும் எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் இருப்பது நல்லது.
சிம்மம் - சுமாரான நாளாக இருக்கும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்பது நல்லது.
கன்னி - எதிலும் பதற்றத்துடன் செயல்படுவதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள். முதலீடு செய்வதற்கு ஏற்ற சரியான நாள் இதுவாகும்.
துலாம் - நல்ல செய்திகள் தேடி வரும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் உயர்வ ஏற்படும். சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் லாபகரமான செய்திகள் வந்து சேரலாம். இதனால் மன மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
விருச்சிகம் - சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சாதமான சூழல் நிலவும். வாழ்க்கை துணையுடன் சிறு சிறு பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். உடல் நலனில் உதாசீனம் வேண்டாம். உடனடியாக தகுந்த மருந்துகள் எடுத்துக் கொள்வது நல்லது.
தனுசு - வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது நல்லது. அதிக மன அழுத்தம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
மகரம் - சுமாரான நாராக இருக்கும். தியானம் போன்ற பயிற்சிகளால் மனதில் அமைதி ஏற்படும். வியாபாரத்தில் கூட்டணிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உணவு பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றி இருப்பவர்களிடம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது.
கும்பம் - வேலைகள் அதிகரிக்கும். பொறுப்புகள் அதிகரிக்கலாம். குழந்தைகள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். அலுவலகத்தில் சவால்களை ஏற்றுக் கொள்ள தயாராக இருங்கள். எதையும் பொறுமையுடன் செய்வது முன்னேற்றத்தை தரும்.
மீனம் - உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய நேரம். சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். விருப்பமான செயல்களை செய்ய விரும்புவீர்கள். அடுத்தடுத்த வேலைகள் தொடர்ந்தாலும் இடையில் ஓய்வு எடத்துக் கொண்டு, ஆரோக்கியத்தை கவனிக்க மறந்து விடாதீர்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
100 நாள் வேலைத்திட்டம்.. தகவல் அறியும் உரிமை சட்டம் .. வரலாறு படைத்த நாயகன் மன்மோகன் சிங்!
நல்ல தலைவர், பொருளாதார மேதையை நாடு இழந்து விட்டது... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த நண்பராக விளங்கியவர் மன்மோகன் சிங் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
Manmohan singh.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. இந்தியாவின் சிறந்த பொருளாதார மேதை!
எப்ஐஆர் நகல் வெளியானது சட்டப்படி குற்றம்.. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.. போலீஸ் கமிஷனர் அருண்
Annamalai.. சவுக்கால் அடிப்பேன்.. திமுக ஆட்சி போகும் வரை செருப்பு போட மாட்டேன்.. அண்ணாமலை ஆவேசம்!
Anna university: அண்ணா பல்கலைக்கழக சம்பவம்.. கடுமையான தண்டனை தர வேண்டும்.. கனிமொழி
Annamalai: சவுக்கடி, செருப்பு புறக்கணிப்பு, கடும் கோபம்.. வரலாறு காணாத ஆவேசம் காட்டிய அண்ணாமலை!
Chandrapriyanga.. மகன்களுக்கு சமையல் கற்று தரும் சந்திரபிரியங்கா.. செம்ம செம.. சூப்பர் அம்மாதான்!
{{comments.comment}}