12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 25, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 25, 2025,09:56 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மார்ச் 25 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :




குரோதி வருடம், பங்குனி 11ம் தேதி செவ்வாய்கிழமை

ஏகாதசி, திருவோண விரதம். அதிகாலை 01.22 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. அதிகாலை 12.57 வரை உத்திராடம் நட்சத்திரம், பிறகு திருவோணம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 12.57 வரை மரணயோகம், பிறகு காலை 06.18 வரை அமிர்தயோகம், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 08.15 முதல் 9 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் -  மிருகசீரிடம், திருவாதிரை


இன்றைய ராசிபலன் :


மேஷம் உத்தியோக பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பெரியோர்களின் ஆலோசனையும், ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடன் இருப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிரமங்கள் குறையும். 


ரிஷபம் - உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். சிறு தூர பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபடுவதால் மன அமைதி கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வரவான நாள்.


மிதுனம் - உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. படபடப்பு, தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அதிக எதிர்பார்ப்புக்களை வளர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பெரியோர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்ப்புகள் நிறைந்த நாள்.


கடகம் - உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் வாய்ப்புகளும் கிடைக்கும். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த பண வரவுகள் கிடைக்கும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.


சிம்மம் - சந்தேக உணர்வுகளை தவிர்த்து, தீவிரமாக விசாரித்து முடிவு எடுக்க வேண்டும். பங்காளிகள் வழியில் ஏற்பட்டு கருத்து வேறுபாடு குறையும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மிக பணிகளில் நாட்கள் அதிகரிக்கும். கவலைகள் குறையும் நாளாக இருக்கும்.


கன்னி - குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். பேச்சு வார்த்தைகளில் இருந்த தடை தாமதங்கள் குறையும். வெற்றியான நாள்.


துலாம் -  ஆரோக்கிய பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். ஊக்கமான நாள். 


விருச்சிகம் - செய்யும் முயற்சிகளில் இருந்து வந்த தடை தாமதங்கள் மறையும். உத்தியோகத்தில் உயர்வான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இருந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். கலைகளில் ஆர்வம் ஏற்படும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதால் லாபங்கள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாளாக இருக்கும். 


தனுசு - குடும்பத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் லாபம் ஏற்படும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மறைமுக திறமைகள் வெளிப்படும். தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். 


மகரம் - ஆன்மிக நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். புதியவர்களால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பண வரவை அதிகரிப்பதற்கான சிந்தனை அதிகரிக்கும். சமூகத்தில் பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபார தொழில் மூலம் உயர்வான சூழல் ஏற்படும். மறதி நிறைந்த நாளாக இருக்கும்.


கும்பம் -  எதிர்பாராத செலவுகளால் விரயங்கள் ஏற்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் வேலைவாய்ப்பு சாதகமாகும். நெருக்கமானவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை குறைப்பது நல்லது. செயல்களில் இருக்கும் தடைகள் அறிவீர்கள்.


மீனம் -  புதிய விஷயங்களில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். வியாபார வளர்ச்சிக்கான உதவிகள் கிடைக்கும். புதுவிதமான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். சமூக பணிகளில் புகழ் உண்டாகும். அன்பு அதிகரிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்