தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 24 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 11 ம் தேதி வெள்ளிக்கிழமை
மாலை 06.22 வரை தசமி, பிறகு ஏகாதசி. காலை 04.29 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 01.30 முதல் 02.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - சாதகமான நாளாக இருந்தாலும் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். பணிகளை உரிய நேரத்தில் முடிக்க திட்டமிட்டு பணியாற்றுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்ல வேண்டும். பணவரவு அதிகரிப்பதால் சேமிப்பை உயர்த்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம் - சிறப்பான நாளாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உங்களின் பணிகள் மற்றவர்களால் பாராட்டப்படும். வாழ்க்கை துணை மீதான அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் அதை பயனுள்ளதாக செலவிட திட்டமிடுவீர்கள். மனம் அலைபாயாமல் இருக்க ஆன்மிகத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
மிதுனம் - எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அலுவலகத்தில் பணிகளை உரிய நேரத்தில் முடிப்பீர்கள். இதனால் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் அமைதியான போக்கை கடைபிடிப்பது நல்லது. செலவுகளை சமாளிக்க சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
கடகம் - சாதகமான நாளாக இருக்கும். பணியில் தவறுகள் ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு செல்படுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பணம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்திவைப்பது நல்லது.
சிம்மம் - வளர்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலைபளு அதிகரித்தாலும் அதனை திறமையாக சமாளிப்பீர்கள். சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் நட்புடன் நடந்து கொள்வது நல்லது.
கன்னி - மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணிகளை திட்டமிட்டு செய்வது சிறப்பு. வாழ்க்கை துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இருவருக்கும் இடையே புரிதல் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்காலத்திற்காக சேமிக்க நினைப்பீர்கள்.
துலாம் - சிறப்பான நாளாக இருக்கும். எந்த காரியத்தையும் முழு நம்பிக்கையுடன் செய்வது நல்லது. பணிகள் அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பண விஷயத்தில் கவனமாக இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.
விருச்சிகம் - எதிலும் பொறுமையாக யோசித்து செயல்படா விட்டால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணிகளை கவனமாக செய்ய வேண்டும். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்ல வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். அதே சமயம் பயனுள்ளதாக பணத்தை செலவிடுவீர்கள்.
தனுசு - சுறுசுறுப்பான நாளாக இருக்கும். சாதகமான பலன்கள் ஏற்படும். பணியில் இலக்குகளை அடைந்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை ஏற்படும். வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
மகரம் - திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். மற்றவர்கள் உங்களின் திறளையை கண்டு ஆச்சரியப்படுவார்கள். வாழ்க்கை துணையுடன் விட்டுக் கொடுத்துச் செல்லா விட்டால் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவு அதிகரிக்கும். எதிர்காலத்திற்காக சில திட்டங்களை வகுப்பீர்கள்.
கும்பம் - முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அலுவலக சூழல் மகிழ்ச்சி அளிக்கும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். பண வரவு அதிகரிப்பதால் சேமிப்பு உயரும்.
மீனம் - எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் பொறுமையாகவும், கவனமாக இருக்க வேண்டும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். இருந்தாலும் அவைகள் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!
நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!
ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!
இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!
சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!
பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்
{{comments.comment}}