12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 24, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Dec 24, 2024,08:17 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2024 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மார்கழி 09 ம் தேதி செவ்வாய்கிழமை

இன்று இரவு 08.54 வரை நவமி, அதற்கு பிறகு தசமி. பகல் 01.49 வரை அஸ்தம், பிறகு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம்.


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை 

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் -  சதயம், பூரட்டாதி




இன்றைய ராசிபலன் :


மேஷம் - இனிமையான நாளாக இருக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். அதே சமயம் மற்றொரு புறம் செலவு வந்து நிற்கும். வேலை தொடர்பாக வெளியூர் செல்ல நேரிடும். பயணங்களில் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சிறிது அக்கறை அவசியம்.  


ரிஷபம் - நல்ல செய்திகள் தேடி வரும். தொழில், குடும்பம், பணம் என எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்திலும் நல்ல தகவல் வந்து மனதை குதூகலப்படுத்தும். மனம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இருந்தாலும் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.


மிதுனம் - சந்தோஷ அனுபவங்கள் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் நல்க புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். செலவுகளில் கவனம் செலுத்துவது நல்லது. மனதில் அமைதி நிறைந்திருக்கும்.


கடகம் - மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குவது நல்லது. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.


சிம்மம் - இனிமையான நாளாக இருக்கும். குடும்ப உறப்பினர்கள் தொடர்பான சில நல்ல செய்திகள் தேடி வரலாம். உணர்ச்சிவசப்படாமல் எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் சில செலவுகளும் ஏற்படலாம்.


கன்னி - ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவுகளில் கட்டுப்பாடு அவசியம். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்தையும் கனித்துக் கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். 


துலாம் - நன்மை நிறைந்த நாளாக இருக்கும். வெளிநாடு அல்லது வெளியூர்களில் இருந்து சுப செய்திகள் வரலாம். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். எதையும் திட்டமிட்டு செய்வதால் சிரமங்களை தவிர்க்கலாம்.


விருச்சிகம் - தொழிலில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வேலை நெருக்கடி காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம். வேலையில் கவனமுடன் இருப்பது நல்லது. எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.


தனுசு - இனிமையான மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலர் சிறு சிறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது.


மகரம் - எதிர்பார்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். சிலவருக்கு சொத்து சேர்க்கை ஏற்படலாம். பண வரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.


கும்பம் - முதலீடுகளில் விருப்பங்கள் அதிகரிக்கும் வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவதால் சில பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். எதிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் நன்கு சிந்தித்து செயல்படுங்கள். 


மீனம் - எதிர்கால நலன் கருதி சில புதிய திட்டங்களை வகுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்களை தேட நினைப்பீர்கள். வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள். வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏப்ரல் 16ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

news

போதும்.. விரதத்தை முடிச்சுக்கலாம்.. எல்லோரும் செருப்பு போட்டுங்கங்க.. அண்ணாமலை கோரிக்கை!

news

தேர்தல் ஆணையம் அங்கீகாரம் எனக்கே.. அன்புமணி சுட்டிக் காட்டுவது என்ன.. மாம்பழத்துக்கு ஆபத்து வருமா?

news

திருட்டு மாடல் அரசை துரத்துவோம்.. முதல் அறிக்கையிலேயே திராவிடத்தைத் தவிர்த்த நயினார் நாகேந்திரன்!

news

சிங்கப்பூரில் அடுத்த 3 மணி நேரத்தில் கன மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 13, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

2026ல் சட்டமன்ற தேர்தல்.. நாலே கூட்டணிதான்.. விறுவிறுப்பாகும் கட்சிகள்.. பரபரக்கும் அரசியல் களம்!

news

தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு.. வானகரம் விழாவில் அறிவிப்பு!

news

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு.. மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன்.. அமைச்சர் பொன்முடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்