12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 22, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Dec 22, 2024,10:50 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2024 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மார்கழி 07 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

இன்று மாலை 04.50 வரை சப்தமி, அதற்கு பிறகு அஷ்டமி. காலை 08.56 வரை பூரம், பிறகு உத்திரம். காலை 08.56 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம்.


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 3 முதல் 4 வரை

கெளரி நல்ல நேரம் : காலை  3 முதல் 4 வரை; மாலை 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


சந்திராஷ்டமம் -   திருவோணம், அவிட்டம்




இன்றைய ராசிபலன் :


மேஷம் - குடும்பத்துடன் ஆன்மிக தலங்களுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். செலவுகள் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான புதிய வழிகள் பிறக்கும்.


ரிஷபம் - வேலையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்வி தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் இடையூறுகள் ஏற்படலாம். கவனம் அவசியம்.அதே சமயம் தொழில் செய்பவர்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.


மிதுனம் - கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு செல்வதால் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. நண்பர் ஒருவர் உங்களுக்கு உதவ முன் வருவார். வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.


கடகம் - உத்தியோகம் தொடர்பாக வெளியூர் சென்று வர வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். ஆடை, வாகன பராமரிப்பிற்காக அதிக தொகையை செலவிட வேண்டி இருக்கும். பணவரவு அதிகரிக்கும். அதே சமயம் செலவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.


சிம்மம் - அலுவலகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணம் பல வழிகளில் வர துவங்கும். நண்பர்களின் ஆதரவு நம்பிக்கையை அதிகரிக்க செய்யும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய உற்சாகத்தை தரும்.


கன்னி - வியாபாரம் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் வர துவங்கும். லாபத்திற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையில் சில சிரமங்களும் வரலாம். வெளியிடங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.


துலாம் - சுப நிகழ்ச்சிகளில் கலந்த கொள்வீர்கள். எழுத்து துறைகளில் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடல் பிறந்தவர்களால் பண உதவி கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வதால் சிரமங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.


விருச்சிகம் - உத்தியோகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டம். பண வரவு அதிகரிக்கும். மற்றொரு புறம் செலவுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அதனால் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.


தனுசு - வியாபாரத்தில் சாதகமான பலன்கள் ஏற்படும். பொறுமையை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற கோபம், வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் ஆதரவுகள் அதிகரிக்கும். அதே சமயம் வேலை பளுவும் அதிகரிக்கும்.


மகரம் - வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். இட மாறுதல்களும் ஏற்படலாம். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு தைரியத்தை தரும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்றால் சில சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.


கும்பம் - பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


மீனம் - உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் மரியாதை அதிகரிக்கும். வேலையில் கவனம் செலுத்துவீர்கள். அதனால் குடும்பத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எதிலும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆப் பிரேக்கை எதிர்பார்த்தால்.. கேரம் பாலை போட்டு விட்டீர்களே.. அஸ்வினுக்கு பிரதமர் மோடி கலகல கடிதம்!

news

200 இடங்களில்.. ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர்.. திமுக செயற்குழு

news

பிரதமர் நரேந்திர மோடிக்கு குவைத் நாட்டின் The Order Of Mubarak Al Kabeer உயரிய விருது!

news

புஷ்பா 2 படம் பார்க்க வந்த போது சிக்கிய கடத்தல்காரன்.. Smuggling டெக்னிக்ஸ் கத்துக்க வந்திருப்பாரோ!!

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : கும்பம் ராசிக்காரர்களே.. அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள்

news

உன்னை தினம் தேடும் தலைவன்.. விஜயகாந்த் மீது காதல் வந்த அந்த ஒரு நிமிடம்.. பிரேமலதா சொன்ன ரகசியம்!

news

தாய் மனம் (சிறுகதை)

news

மார்கழி 8 திருவெம்பாவை பாசுரம் 8.. கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்

news

மார்கழி 8 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 8.. கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்