12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 21, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Jan 21, 2025,10:10 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜனவரி 21 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், தை 08 ம் தேதி செவ்வாய்கிழமை

தேய்பிறை அஷ்டமி. பகல் 12.43 வரை சப்தமி, பிறகு அஷ்டமி. இரவு 11.43 வரை சித்திரை, பிறகு சுவாதி நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 01.30 முதல் 02.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  பண வரவு நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் திறமைகள் வெளிப்படும். சில புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஏற்ற நாளாக இந்த நாள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமும், நன்மைகளும் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.


ரிஷபம் - வியாபாரிகள் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும். வார்த்தைகளில் நிதானமும், இனிமையும் காக்க வேண்டும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. சில வெளியூர் செல்வதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். 


மிதுனம் - திருப்திகரமான நாளாக இருக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை இன்று பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். நல்ல லாபமும் பெறுவீர்கள். இதனால் மனதில் நிறைவாக எண்ணம் ஏற்படும்.


கடகம் -  அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் திறமை மற்றும் பணிகள் மற்றவர்களால் பாராட்டப்படும். நீண்ட நாள் கனவு நிறைவேறுவதற்கான நாளாக இந்த நாள் இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் தேடி வரலாம்.


சிம்மம் - எதிலும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். ஆவண போக்குகளை தவிர்க்க வேண்டும். சுற்றி இருப்பவர்கள் நல்ல ஆலோசனைகளை கூறினால் அதை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.


கன்னி - பொருளாதார நிலை நன்றாக இருக்கும். இருந்தாலும் சில எதிர்பாராத செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற விஷயங்களை நினைத்து மன குழப்பம், அழுத்தம் அடைவதை தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்க அமைதியை காக்கும் பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.


துலாம் - உடல் நலனில் அக்கறத செலுத்த வேண்டிய நாள். வயதில் மூத்தவர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அலுவலகத்தில் சில வீண் பழிகள் வந்து சேரும். உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிரமங்களை தவிர்க்க உதவும்.


விருச்சிகம் - குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சில நல்ல செய்திகளை கேட்கலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இதனால் சிலருடன் மனக்கசப்பு ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். சில முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்வீர்கள்.


தனுசு - தொழில் மற்றும் பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். இலக்குகளை அடைய கூடுதலாக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சில இழப்புகளை சந்திக்க நேரிடலாம். மனதில் சில குழப்பங்கள் வந்து நீங்கும்.


மகரம் -  சிலருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். உணவில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயிற்சிகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம்.


கும்பம் - இன்ற சாதகமான நாளாக இருக்கும். சில எதிர்பாராத நிகழ்வுகள் வேலையை பாதிக்கலாம். சில விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமல் போகலாம். எதிலும் கால தாமதம் ஏற்படுவதால் கவலையும், குழப்பமும் அடைவீர்கள்.


மீனம் - வாழ்க்கையில் ஏற்ற வாழ்வுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். அதே போல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். நிதி நிலை, செலவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தம் ஏற்படும் விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெரியார் குறித்துக் கேட்ட வாக்காளர்.. ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் சீதாலட்சுமி அளித்த பதில்!

news

சபாநாயகர் அப்பாவு சொன்ன ஞானசேகரன் இவர்தான்.. பத்திரிகையாளர் நிரஞ்சன்குமார் தரும் விளக்கம்!

news

இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில்.. பிப்ரவரி 5 பொது விடுமுறை அறிவிப்பு

news

திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி.. பட்டையைக் கிளப்ப வரும் இசைஞானி.. ரசிகர்களே ரெடியா?

news

அன்னா ஹசாரே போல.. உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்?.. அமைச்சர் பி.கே. சேகர்பாபு கேள்வி

news

நெகிழியின் கண்ணீர் (கவிதை)

news

Cooking Tips.. மட்டன் சிக்கன் குழம்புக்கு டஃப் கொடுக்கும் பட்டன் காளான் பட்டாணி குழம்பு!

news

சிவகங்கை மாவட்டத்தில்.. இன்றும் நாளையும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு!

news

வாரிசு, கேம்சேஞ்சர் பட தயாரிப்பாளர்.. தில் ராஜு வீட்டில்.. வருமானவரித்துறை திடீர் சோதனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்