தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மாசி 09 ம் தேதி வெள்ளிக்கிழமை
காலை 09.40 வரை அஷ்டமி, பிறகு நவமி திதி உள்ளது . பகல் 01.47 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. பகல் 01.47 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - அஸ்வினி, பரணி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பழைய நினைவுகள் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் புரிதல் ஏற்படும். புதிய வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பதற்றமின்றி, கவனமாக செயல்படுவதால் பிரச்சனை இன்றி எந்த செயலையும் முடிக்க முடியும்.
ரிஷபம் - குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். தம்பதிகளுக்குள் அந்யோன்யம் அதிகரிக்கம்.கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். புதுமையான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும்.
மிதுனம் - விரும்பிய காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கை கூடும். பெற்றோர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும்.
கடகம் - தம்பதிகளுக்குள் அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். அடமானமாக வைத்த பொருட்களை மீட்பதற்கான சூழல் ஏற்படும். நீண்ட பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
சிம்மம் - நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். பூமி விற்பனையில் லாபம் அதிகரிக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை வேண்டும். சேமிப்பை அதிகரிக்கும் எண்ணம் பிறக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் ஏற்படும்.
கன்னி - சிறு தூர பயணங்கள் ஏற்படலாம். அக்கம், பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். எந்த செயலையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். பெருமைகள் நிறைந்த நாளாக இருக்கும்.
துலாம் - உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். பொருளாதாரம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும்.
விருச்சிகம் - குடும்ப விஷயங்களில் அலட்சியம் இன்றி செயல்பட வேண்டும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். வாக்கு சாதுர்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப் போகும். நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும்.
தனுசு - அறிமுகமில்லாதவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்க வேண்டும். வியாபாரத்தில் உயர்ந்த வாய்ப்புகள் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். பொருளாதாரம் சுமாராக இருக்கும்.
மகரம் - சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சமூகத்தில் கெளரவம் அதிகரிக்கும். கடல் பயண வாய்ப்புகள் சிலருக்கு ஏற்படலாம். ஆசைகள் நிறைவேறுவதற்கான சூழல் ஏற்படும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையில் திறமைகள் வெளிப்படும். புகழ் நிறைந்த நாளாக இருக்கும்.
கும்பம் - குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்புகள் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதுமையான சூழல் ஏற்படும். திறமைகள் வெளிப்படும். கல்வியில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.
மீனம் - உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஏற்படும். அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}