தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 06 ம் தேதி சனிக்கிழமை
தேய்பிறை சஷ்டி, கரிநாள். இன்று மாலை 03.10 வரை சஷ்டி, அதற்கு பிறகு சப்தமி. காலை 06.53 வரை மகம், பிறகு பூரம். காலை 06.23 வரை மரணயோகம், பிறகு காலை 06.53 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 05.15 முதல் 6 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - அலுவலகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வேலைகளிலும் சில மாற்றங்கள் ஏற்படலாள். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். மற்றொரு புறம் செலவும் அதிகரிப்பதால் கவலை அடைவீர்கள். வியாபாரத்தில் நண்பர்கள் உதவ முன்வருவார்கள்.
ரிஷபம் - கல்வி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலை விஷயமாக வெளியூர் சென்று வரலாம். நண்பர்களின் உதவியால் வருமானம் அதிகரிப்பதற்கான வழிகள் பிறக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தொழிலில் மாற்றமான நிலை ஏற்படும்.
மிதுனம் - குடும்பத்துடன் ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்களின் ஆதரவு தைரியத்தை தரும். தந்தையின் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் பணியிட மாற்றம் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் முடிவுகள் எடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்பட வேண்டும்.
கடகம் - உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். அரசின் ஆதரவை பெறுவீர்கள். லாபம் அதிகரிக்கும். இட மாற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். சகோதர சகோதரிகள் வழியில் ஆதரவு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகள் நல்ல பலனை தரும்.
சிம்மம் - எழுத்து தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களின் உதவியால் தொழிலில் சில மாற்றங்களை கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
கன்னி - வியாபாரம் சிறப்பாக இருக்கும். லாப வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக வெளியூர் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்ப பிரச்சனைகள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வருமானம் அதிகரிப்பதற்கான் புதிய வழிகள் கிடைக்கும்.
துலாம் - பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். சொத்துக்கள் மூலம் பணம் வரலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உங்களின் உடல்நிலையில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
விருச்சிகம் - உத்தியோகத்தில் யாருடனும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். வருமானம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய நண்பர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
தனுசு - உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் லாபகரமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி பணிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
மகரம் - குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். தந்தையின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். பணிகளில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். நண்பர்களின் உதவியால் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும்.
கும்பம் - அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரலாம். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அலைச்சல்கள் குறையும்.
மீனம் - பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வரும். வியாபாரத்தில் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகலாம். அதனால் மன வேதனையும், பதற்றமும் அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ராபின் உத்தப்பாவுக்கு பிடிவாரண்ட்.. ஊழியர்களிடம் பிடித்த பிஎப் பணத்தை செலுத்தாமல் ஏமாற்றிய வழக்கில்!
தொடர் சரிவில் இருந்து திடீர் என உயர்ந்த தங்கம் விலை.... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்...!
வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. வானிலை மையம் தகவல்
மண்டல பூஜைக்கு அதிகரித்து வரும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள்.. இதுவரை 27 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!
இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் அட்டூழியம்.. கொலைவெறித் தாக்குதல்.. தமிழக மீனவர்கள் வேதனை!
Yearender 2024.. வருஷம் முடியப் போகுது.. இந்த ஆண்டை கலக்கிய டாப் 10 தமிழ்ப் படங்கள்!
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மகரம் ராசி.. குடும்பத்தில் வளர்ச்சி .. குழந்தைகளால் பெருமை!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 21, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
குமரி முனை திருவள்ளுவர் சிலையை.. Statue Of Wisdom ஆக கொண்டாடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}