தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 05 ம் தேதி வெள்ளிக்கிழமை
இன்று பகல் 01.55 வரை பஞ்சமி, அதற்கு பிறகு சஷ்டி. காலை 05.07 வரை ஆயில்யம், பிறகு மகம். காலை 05.07 வரை சித்தயோகம், பிறகு காலை 06.23 வரை அமிர்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.15 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். நிதி நிலை நன்றாக இருப்பதால் மகிழ்ச்சியும் அதிகமாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும்.
ரிஷபம் - சாதகமான பலன்களை தரும் நாளாக இருக்கும். அன்பானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வி தொடர்பான பணிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் பணியில் இடமாற்றம் ஏற்படலாம். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். தொழில் நிலை சிறப்பாக இருக்கும்.
மிதுனம் - ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். பண விஷயத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தையும், இனிமையையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். எதையும் பொறுமையாக செய்யுங்கள். வருமானம் குறைந்து, செலவுகள் அதிகரிப்பது தொடர்பான கவலைகள் ஏற்படும்.
கடகம் - நன்மைகள் அதிகம் நிறைந்த நாளாக இருக்கும். நம்பிக்கையுடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். இருந்தாலும் ஆரோக்கியத்தில் ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள். வேலையில் இட மாற்றம் வருவதற்கான வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம் - எதிலும் கவனமுடன் இருக்க வேண்டிய நாள். எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் யோசித்து செயல்பட வேண்டும். காயங்கள் ஏற்படலாம். கவனமாக இருங்கள். தொழிலில் மாற்றம் வரலாம். குடும்பத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்லும் சூழல் சிலருக்கு ஏற்படலாம்.
கன்னி - சுமாரான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். பொருளாதார நிலை மகிழ்ச்சியை தரும். பேசும் போது நிதானத்துடன் பேசுவது நல்லது. வியாபாரம் சுறுசுறுப்படையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களுடன் வெளியில் சென்று வர திட்டமிடுவீர்கள்.
துலாம் - பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய நண்பரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். தடைபட்ட வேலைகள் முடியும். தொழிலில் சாதமான சூழல் ஏற்படும்.
விருச்சிகம் - மங்களகரமான நாளாக இருக்கும். வியாபாரம் விரிவடையும். லாப வாய்ப்புகள் அமையும். சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் உயர்வான நிலை இருக்கும்.
தனுசு - வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். சில நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வர வாய்ப்பு ஏற்படும்.
மகரம் - அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் அமையலாம். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். இதனால் உற்சாகமாக காணப்படுவீர்கள்.
கும்பம் - வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும். அலுவலக பணிகள் நினைத்த படி நடைபெறும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஓய்வு கிடைக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
மீனம் - நல்ல நிகழ்வுகள் நடக்கும் நாளாக இருக்கும். சிலரின் அறிவுரை புதிய வழிகாட்டுதலை ஏற்படுத்தும். சுப செய்திகள் தேடி வரும். எதிரிகளும் நட்பு பாராட்டுவார்கள். பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வீடு, மனை, வாகன யோகம் அமையும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}