12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 19, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Dec 19, 2024,10:12 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய பஞ்சாங்கம் :

குரோதி வருடம், மார்கழி 04 ம் தேதி வியாழக்கிழமை
இன்று பகல் 01.10 வரை சதுர்த்தி, அதற்கு பிறகு பஞ்சமி. காலை 04.09 வரை பூசம், பிறகு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை  12.15 முதல் 01.15 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை

சந்திராஷ்டமம் -  மூலம், பூராடம்

இன்றைய ராசிபலன் :



மேஷம் - அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் - சுமாரான நாளாக இருக்கும்.  சற்று பதற்றத்துடன் காணப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லது. குடும்ப அமைதியில் கவனம் செலுத்துங்கள். வேலையில் அதிகம் உழைக்க வேண்டி வரலாம்.

மிதுனம் - வெளிநாட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகள் வெற்றி அடையும். பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் தொழில் நன்றாக இருக்கும்.

கடகம் -  மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் குழப்பம் வந்து நீங்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிதி நிலைமை சீராக இருக்கும்.

சிம்மம் - மனம் குழப்பத்துடன் இருப்பீர்கள். பொருளாதார நிலை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இருக்காது. பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி - வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலில் ஏற்றம் ஏற்படும். வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

துலாம் - மனதில் விரக்தி குடிகொள்ளும். பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உடல் இருப்பவர்களை அணுசரித்து செல்ல வேண்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வருமானம் அதிகரிக்கும். திடீர் பண வரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் - பேச்சில் இனிமை அதிகரிக்கும். அதே சமயம் வார்த்தைகளில் கவனம் வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலை பளு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

தனுசு - இனிமையான நாளாக இருக்கும். குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் வரும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள்.

மகரம் - உடல்நிலை பாதிக்கப்படலாம். ஆரோக்கிய விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். தொழிலில் சிரமங்கள் ஏற்படலாம். இருந்தாலும் பொருளாதார நிலை பாதிக்கப்படாது. 

கும்பம் - அலுவலகத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. பொறுமையை கையாள வேண்டும். எதிலும் கவனம் அவசியம். வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பணவரவு அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும்.

மீனம் - நல்ல செய்திகள் தேடி வரும். மனதில் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்கலாம். அதே சமயம் பண வரவிற்கான வழிகளும் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய தொழில் துவங்கலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!

news

மன ரீதியிலான பிரச்சனை... விரைவில் மீண்டு வருவேன்... நடிகை நஸ்ரியா!

news

இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு: நயினார் நகேந்திரன்!

news

இன்ஸ்டா ரீல்ஸால் மகள் கண் முன்னே பறிபோன தாயின் உயிர்..வைரலாகும் வீடியோ..!

news

அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை... பாஜக தேசிய தலைமை விளக்கம்!

news

வெயிலுக்கு இதமான குல்பி.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

news

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தின் மேல் கோயில் கோபுரம்...எதிர்க்கட்சிகள் கண்டனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்