தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மாசி 06 ம் தேதி செவ்வாய்கிழமை
தேய்பிறை சஷ்டி. காலை 04.06 வரை பஞ்சமி, பிறகு சஷ்டி திதி உள்ளது . காலை 06.57 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தந்தை வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். தம்பதிகள் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்.
ரிஷபம் - போட்டிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். எதிர்பாராத பணவரவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி ஏற்படும். இதனால் புதிய நம்பிக்கை பிறக்கும்.
மிதுனம் - மனதில் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். உயர் கல்வி விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும். திறமை ஏற்ப பாராட்டுக்களும், அங்கீகாரமும் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உயர்விற்கான வழிகள் பிறக்கும்.
கடகம் - தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். வீண் பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பண வரவு சுமாராக இருக்கும்.
சிம்மம் - அக்கம் பக்கத்தினரின் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடலில் சோர்வு ஏற்படலாம். உறவினர்களின் வருகை அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் மன பக்குவம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வர்த்தக பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும்.
கன்னி - நிலுவையில் இருந்த பணவரவு கைக்கு வரும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பணிகளை செய்ய வேண்டி இருக்கும். புதிய திட்டங்களை வகுப்பீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறப்புடன் காணப்படுவீர்கள். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. அன்பு அதிகரிக்கும்.
துலாம் - நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். சுப காரிய பேச்சுக்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் குறையும். உடல் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாளாக இருக்கும்.
விருச்சிகம் - பேச்சுக்களின் அனுபவ அறிவு வெளிப்படும். சமூக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் சுதந்திர தன்மை அதிகரிக்கும். ஆடம்பர விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
தனுசு - வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எண்ணிய பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். பக்தி நிறைந்த நாளாக இருக்கும். மாற்றம் நிறைந்த நாளாக இருக்கும்.
மகரம் - பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் தொடர்பாக வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
கும்பம் - நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உறவினர்களிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
மீனம் - எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கவனக்குறைவால் சில விரயம் ஏற்படலாம். சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்ல வேண்டும். வீட்டு செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களால் நெருக்கடியான சூழல் .ண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனை நிறைந்த நாளாக இருக்கும்.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}