12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 17, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Jan 17, 2025,10:39 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய பஞ்சாங்கம் :

குரோதி வருடம், தை 04 ம் தேதி வெள்ளிக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி. காலை 05.35 வரை திரிதியை, பிறகு சதுர்த்தி. பகல் 02.24 வரை மகம், பிறகு பூரம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.33 வரை அமிர்தயோகம், பிறகு பகல் 02.24 வரை மரணயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்

இன்றைய ராசிபலன் :



மேஷம் - உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும். குடுத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். பிரச்சனைகளுக்கு நண்பர்கள் மூலம் தீர்வு காண்பீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம் - கடின உழைப்பால் பலனடைய வேண்டிய நாள். நட்பு வட்டாரம் விரிவடையும். திறமைகள் வெளிப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். புதிய முயற்சிகள் பலனளிக்கும். நம்பிக்கையுடன் இலக்குகளை நோக்கி முன்னேறுவீர்கள்.

மிதுனம் - வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நம்பிக்கை பிறப்பதால் பல பிரச்சனைகளை தீர்க்க நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தை செலவிட நினைப்பீர்கள்.மற்றவர்களிடம் வெளிப்படையாக இருப்பது நல்லது.

கடகம் -  சுமாரான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உற்சாகத்தை கொடுக்கும். சவால்களை புத்திசாலித்தனமாக சமாளிப்பீர்கள். எதிலும் பொறுமையை கையாள வேண்டும். எடுக்கும் முடிவுகளில் நம்பிக்கை, உறுதியுடன் இருப்பத நல்லது. 

சிம்மம் - நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும். சுற்றி இருப்பவர்களுக்கு ஒற்றுமையை கடைபிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றத்திற்கு புதிய யோசனைகள் கிடைக்கும். உங்களின் தலைமைத்துவ திறன் வெளிப்படும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

கன்னி - அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் வெற்றி காண்பீர்கள். உங்களின் அறிவாற்றல், திறைமகள் வெளிப்படும். பழைய பணிகளை முடிக்க நினைப்பீர்கள். வேலைகளுக்கு நடுவே ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். 

துலாம் - சுற்றி இருப்பவர்களுடன் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. திறமையை முழுமையாக பயன்படுத்துவீர்கள். உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம் - அறிமுகமில்லாதவர்களை நம்ப வேண்டாம். அமைதியை கடைபிடிப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்தி வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். புதிய பொறுப்புகளை ஏற்பதால் உங்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகிடைக்கும். வேலைகளை உரிய நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள்.

தனுசு - புதிய ஆற்றலுடன் உற்சாகத்தையும் தரும் நாளாக இருக்கும். திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வர நினைப்பீர்கள். நேர்மறையான எண்ணங்கள், வெளிப்படையான செயல்பாடுகளால் முன்னேற்றம் கிடைக்கும். 

மகரம் - வேலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற சரியான அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் அவசியம். அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்கும்.

கும்பம் - சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் திறமையால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு ,மரியாதை அதிகரிக்கும். புதிய தொடர்புகள் கிடைக்கும். புதுமையான சிந்தனைகளுடன் இலக்குகளை அடைவதில் அதிக முனைப்புடன் செயல்படுவீர்கள். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம் - புதிய தொடக்கம் கொண்ட நாளாக இருக்கும். மற்றவர்களுடன் அனுசரித்து செல்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பல நாள் உழைப்பிற்கான பலன் கிடைக்கும். மனதை தெளிவாக வைத்திருப்பது நல்லது. அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நல்லது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!

news

ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்

news

கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

news

தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!

news

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!

news

பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கம் அதிரடி முடக்கம்.. மத்திய அரசு நடவடிக்கை..!

news

கொல்வோம்னு மிரட்டுகிறார்கள்.. டெல்லி காவல் நிலையத்தில்.. கௌதம் கம்பீர் புகார்!

news

திருமண நாளான இன்று மனைவி ஷோபாவுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த.. எஸ்.ஏ சந்திரசேகர்..!

news

ஒரு நிஜம் .. ஒரு கற்பனை..!! (சிறுகதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்