12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 17, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Apr 17, 2025,10:21 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், சித்திரை 04 ம் தேதி வியாழக்கிழமை

பகல் 01.24 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இன்று காலை 04.16 வரை அனுஷம் நட்சத்திரமும் பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 12 முதல் 01 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : கிடையாது; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் -  அஸ்வினி, பரணி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - செலவுகள் அதிகரிக்கும். விமர்சன பேச்சுக்கள் வரலாம். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கான வாய்ப்பு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.


ரிஷபம் - சகோதரர் வழியில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணிவு வேண்டிய நாள்.


மிதுனம் - நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிறமொழி மக்களிவ் அறிமுகம் ஏற்படும். முதலீடுகளில் கவனம் வேண்டும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரத்தில் மந்தத்தன்மை குறையும். இரக்கம் வேண்டிய நாள். 


கடகம் - பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். தொழிலில் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தினரை புரிந்து கொள்வீர்கள். உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். பயணம் மூலம் வரவுகள் அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாளாக இருக்கும். 


சிம்மம் - உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகத்துடன் செயல்படவும். தொழில், வியாபாரத்தில் ஆதரவு அதிகரிக்கும். பாசம் வெளிப்படும் நாளாக இருக்கும். 


கன்னி - எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். ஆவண துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். உதவி கிடைக்கும் நாளாக இருக்கும்.


துலாம் -  பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். தடைபட்ட வரவுகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் பற்றிய ஆலோசனை கிடைக்கும். திடீர் பயணங்கள் ஏற்படலாம்.. அமைதி நிறைந்த நாள்.


விருச்சிகம் - தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். தம்பதிகள் இடையே அனுசரித்து செல்லவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பகை விலகும் நாள்.


தனுசு - எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் கைகூடும். தந்தை வழியில் புரிதல் அதிகரிக்கும். மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கோபம் குறையும் நாள்.


மகரம் - ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். செயல்களில் இருந்து வந்த எதிர்ப்புகள் மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். எதிர்பாராத பண வரவிற்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கவனம் தேவை.


கும்பம் -  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணம் அதிகரிக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள்.


மீனம் - உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சமூக பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். தடை மறையும் நாள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்