தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு மார்ச் 17 ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், பங்குனி 03ம் தேதி திங்கட்கிழமை
மாலை 06.38 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது . பகல் 2 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. பகல் 2 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். வீட்டில் சில மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு உத்வேகத்தை ஏற்படுத்தும். மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். இறை வழிபாடு மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். எதிலும் சிந்தித்து செயல்படவும்.
ரிஷபம் - தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். உத்தியோக மாற்ற சிந்தனை ஏற்படும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். உடல் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்த இழுபறி குறையும். நலம் நிறைந்த நாளாக இருக்கும்.
மிதுனம் - நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த மந்ததன்மை குறையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்யும் எண்ணம் தோன்றும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். உயர்கல்வி சிந்தனைகள் அதிகரிக்கும்.
கடகம் - வியாபாரத்தில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். பணிகளில் இருந்து வந்த போட்டி, பொறாமைகள் குறையும். குடும்பத்தில் சுப காரிய பேச்சுக்கள் கைகூடும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிரமம் குறையும் நாளாக இருக்கும்.
சிம்மம் - மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.ஒத்துழைப்பு அதிகரிக்கும். லாபமான நாள்.
கன்னி - அரசு துறைகளில் பொறுமைக்கேற்ப முன்னேற்றம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மருத்துவ துறைகளில் உயர்வு அதிகரிக்கும். உடல் பிறந்தவர்களை அனுசரித்து செல்லவும். மனதில் புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் பிறக்கும். நட்பு நிறைந்த நாளாக இருக்கும். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
துலாம் - உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்யும் எண்ணம் தோன்றும். விவேகத்துடன் செயல்பட்டால் மதிப்பும், பாராட்டுகளும் கிடைக்கும். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும் வெளிப்படையான குணம் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம் - எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உதவிகள் கிடைக்கும்.
தனுசு - மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுப செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனை நம்பிக்கையை தரும். வெற்றி நிறைந்த நாளாக இருக்கும்.
மகரம் - உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் உயர்வு ஏற்படும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயம் கிடைக்கும். சேமிப்பை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும்.
கும்பம் - திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். அரசு பணிகளில் அலைச்சல் ஏற்படும். கற்பனை சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சோர்வான நாள்.
மீனம் - குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பழக்க வழக்களில் மாற்றம் ஏற்படும். மனை விற்பனையில் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும்.
கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!
அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி
கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!
மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!
எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!
அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!
{{comments.comment}}