12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 16, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Apr 16, 2025,10:24 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், சித்திரை 03 ம் தேதி புதன்கிழமை

சங்கடஹர சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள். காலை  11.57 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இன்று அதிகாலை 02.04 வரை விசாகம் நட்சத்திரமும் பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 02.04 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் -  ரேவதி, அஸ்வினி


இன்றைய ராசிபலன் :




மேஷம் - விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். தந்தை வழி உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.


ரிஷபம் - தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும் நட்பும் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் காணப்படும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சிரமம் மறையும்.


மிதுனம் - கலகலப்பான பேச்சுக்களால் மகிழ்ச்சி ஏற்படும். பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். மனதை உருத்திய கவலைகள் விலகும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். பாதியில் நின்ற பணிகளை செய்த முடிப்பீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


கடகம் - மனதை வருத்திய பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த சில காரியங்களில் போராடி வெற்றி பெறுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். 


சிம்மம் - முயற்சிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். அரசு காரியங்களில் இருந்து வந்த இழுபறிகள் மறையும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பகை விலகும் நாள்.


கன்னி - செய்யும் செயல்களில் மன மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வருமானத்தில் ஏற்பட்டிருந்த தடை தாமதங்கள் விலகும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை அமையும்.


துலாம் -  புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வெமியூர் பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவதால் புதல் ஏற்படும். கடன் நெருக்கடிகள் குறையும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் மாற்றம் பிறக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.


விருச்சிகம் - படபடப்பு இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம் புரியாத சிந்தவைகளால் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களே செய்வத நன்மை தரும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. கோப்புகளை கையாளும் போது கவனம் வேண்டும்.


தனுசு - தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கவனம் வேண்டிய நாள்.


மகரம் - திடீர் வரவுகளால் சங்கடங்கள் நீங்கும். அரசு வழியில் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும் நாள்.


கும்பம் -  வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சு திறமையால் நினைத்ததை நிறைவேற்றி கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். நண்பர்களை அனுசரித்து செல்லவும். குடும்ப சூழல் அறிந்து செயல்படுவீர்கள். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள். 


மீனம் - வெளியுலக தொடர்புகளில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். உயர் கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். திட்டமிட்ட காரியங்களில் புதிய அனுபவம் ஏற்படும். பயண துறைகளில் விழிப்புணர்வு வேண்டும். பணிவு வேண்டிய நாள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

CSK vs MI.. பிரித்து மேய்ந்த ரோஹித் சர்மா, சூர்ய குமார் யாதவ்.. சென்னைக்கு மீண்டும் தோல்வி!

news

சிக்கன் மட்டன் கிடையாது.. பீட்சாவை பார்க்கவே கூடாது.. வைபவ் சூர்யவன்ஷி சாதிச்சது இப்படித்தான்!

news

ஹைதராபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்திலிருந்து.. முன்னாள் கேப்டன் முகம்மது அசாருதீன் பெயர் நீக்கம்!

news

தாக்கரேக்கள் ஒண்ணா சேரப் போறாங்களா? .. மகாராஷ்டிரா அரசியல் களத்தில் புதிய பரபரப்பு!

news

சச்சின் ரீரிலீஸ்.. வச்சு செய்யும் வசூல்.. தியேட்டர்களை தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

news

மதிமுக உட்கட்சி விவகாரம்.. மகன் துரை வைகோ எம்.பியை சமாதானம் செய்யும் வைகோ!

news

அச்சச்சோ .. நான் கூட டெங்கு கொசுவோன்னு நினைச்சுப் பயந்துட்டேங்க!

news

சிறுகுறு தொழில்களில் தமிழகம் 3ம் இடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழ்நாட்டில்.. இன்று முதல் 25ஆம் தேதி வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்