12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 16, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 16, 2025,09:50 AM IST
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2025 ஆம் ஆண்டு மார்ச் 16 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய பஞ்சாங்கம் :

குரோதி வருடம், பங்குனி 02ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
மாலை 04.35 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது . காலை 11.27 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.22 வரை காலை 06.22 வரை மரணயோகம், பிறகு காலை 11.27 வரை அமிர்தயோகம், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது. 

நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 01.30 முதல் 02.30 வரை

ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை 
குளிகை - மாலை 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை

சந்திராஷ்டமம் -  சதயம், பூரட்டாதி



இன்றைய ராசிபலன் :

மேஷம் -  கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பேச்சு திறமை வெளிப்படும். மனதில் இருந்த தயக்கங்கள் குறையும். எதிராக இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கலைகளில் முன்னற்ம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாளாக இருக்கும். 

ரிஷபம் - பண நெருக்கடிகள் குறையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அக்கம், பக்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூர பயணம் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.

மிதுனம் - புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் ஈடேறும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வசதி வாய்ப்புக்களை பெருக்கிக் கொள்வதற்கான சிந்தனை அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆசைகள் நிறைந்த நாளாக இருக்கும்.

கடகம் - உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் இருக்கும். மனதில் விரும்பி பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் கை கூடும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். 

சிம்மம் - குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். எதிலும் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். அன்பு நிறைந்த நாளாக இருக்கும்.

கன்னி - பலவிதமான சிந்தனைகளால் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்லவும்.

துலாம் -  நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை முடிப்பீர்கள். குண நலன்களில் மாற்றம் ஏற்படும். பயண செயல்பாடுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமையை கையாளவும். நலம் நிறைந்த நாளாக இருக்கும்.

விருச்சிகம் - நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறதிகள் அதிகரிக்கும். எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

தனுசு - உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். குடும்ப உறப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள்.

மகரம் - சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அரசு துறைகளில் நிதானம் வேண்டும். சிறு தூர பயணத்தால் மனதில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான புதிய சூழ்நிலை அமையும். ஆலோசனைகள் கிடைக்கும்.

கும்பம் -  உத்தியோகம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். ஆவணம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது.

மீனம் -  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் பலவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். தம்பதிகள் மனம் விட்டு பேசுவதால் தெளிவு ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு

news

தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!

news

வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

news

Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!

news

Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

news

அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!

news

கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!

news

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!

news

தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்