தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 02 ம் தேதி புதன்கிழமை
மாட்டுப் பொங்கல். காலை 04.24 வரை பிரதமை, பிறகு துவிதியை. காலை 11.53 வரை பூசம், பிறகு ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - மாலை 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - எதிர்கால நலன் கருதி உங்களின் தகுதியை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களிடம் கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம் - அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு நம்பிக்கையை கொடுக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு தைரியத்தை கொடுக்கும். சுற்றி இருப்பவர்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக நடப்பதால் டென்ஷன்கள் வந்து நீங்கும். எதிர்கால நலன் கருதி செய்யும் முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம் - ஓய்வான நாளாக இருக்கும். பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் அமைதியான போக்கை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மன அமைதியை கெடுத்துக் கொள்ளாதீர்கள். புதிய திட்டங்கள், முயற்சிகளை மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள். வாழ்க்கை துணையுடன் சிறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
கடகம் - மற்றவர்கள் உங்களின் மனதை புண்படுத்தும் நிகழ்வுகள் நடக்கலாம். குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி வரும். மனதிற்கு பிடித்தவர்களின் சந்திப்பு நடக்கலாம். அலுவலகத்தில் உங்களின் கை ஓங்கி இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.
சிம்மம் - உடலில் சோர்வு, மன அழுத்தம் ஆகியவை ஏற்படலாம். உங்களின் கடின உழைப்பு மற்றவர்களால் கவனிக்கப்படும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கடின உழைப்பின் மூலம் வெற்றி காண வேண்டிய நாள். மறைமுக தகுதிகளையும் திறமைகளையும் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
கன்னி - புதிய பிரச்சனைகள் தோன்றி மன அழுத்தம் ஏற்படலாம். தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். திடீரென வரும் வரும் நல்ல செய்திகள் உங்கள் கனவு நிறைவேற உதவியாக இருக்கும். வேலைக்கு நடுவில் உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குவது நல்லது. திருமண வாழ்க்கை இன்பமானதாக இருக்கும். உங்களின் பணிகள் மற்றவர்களால் பாராட்டப்படும்.
துலாம் - அளவுக்கு மிஞ்சிய உற்சாகத்தால் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம். நிலம் வாங்க, விற்க சாதகமான நாளாக இருக்கும். அதன் மூலம் லாபமும் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சுற்றி இருப்பவர்களை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். பேச்சுக்களால் சில சிக்கல்களில் சிக்கிக் கொள்ளலாம். வாழ்க்கை துணை மீது கோபம் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். அனுசரித்து நடந்து கொள்வது சிறப்பு.
விருச்சிகம் - அமைதி காக்க வேண்டிய நாள். எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும். குடும்ப பொறுப்புகள் கூடும். இதனால் மனதில் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிப்பதற்கு முன் சிந்தித்து செயல்படுங்கள். வெளியில் சென்று ஜாலியாக பொழுதை செலவிடுவீர்கள். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
தனுசு - எதையும் எளிதில் எடுத்துக் கொள்ளுங்கள். பழைய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். புதியவர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கையுடன் நடந்தால் இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும்.
மகரம் - நம்பிக்கை அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். இல்லா விட்டால் பணப் பற்றாக்குறை ஏற்படலாம். நெருக்கமானவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். குடும்பத்தினரால் சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக செலவிடுவீர்கள். சிலர் உங்களின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்த கொள்ளலாம். யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.
கும்பம் - ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும். குருமார்களின் சந்திப்பு மனதிற்கு ஆறுதலை தரும். இனிமையான செய்திகள் தேடி வரும். தெரிந்தவர்கள் மூலம் வேலைக்கான வாய்ப்பு தேடி வரும். வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் தீருவதற்கான சூழல் ஏற்படும். வாழ்க்கை துணையின் அன்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.
மீனம் - சோம்பல் உணர்வால் வேலைகள் பாதிக்கப்படலாம். பொருளாதாரத்தில் நன்மைகள் கிடைக்கும். வீட்டில் கலகலப்பான சூழல் நிலவும். குடும்பத்தினருடன் வெளியில் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். பழகியவர்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றவர்கள் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணை மீதான அன்பு அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Exclusive: புதுமையான பட்டாசு.. படபடன்னு வெடிக்கும்.. வெடிச்சதும் விஜய் உருவம் வரும்.. சபாஷ் சபாபதி!
ஜனவரி 18, 19.. மிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. மஞ்சள் அலர்ட்!
லெப்ட்ல குட் பேட் அக்லி.. ரைட்ல ரெட்ரோ.. நெட்பிளிக்ஸ்காரன் சம்பவம் பண்ணிட்டான் மாப்ளை!
திருவள்ளுவர் தினம்.. 9 பேருக்கு விருதுகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்!
அரிட்டாபட்டியைக் காப்பாற்றுங்கள்.. டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம்.. பாலமேடு ஜல்லிக்கட்டில் பதாகை!
நீதி கேட்டு போராடிய பெண்களை.. நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா?.. அன்புமணி ராமதாஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 15, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
Makara Jyothi 2025: சாமியே சரணம் ஐயப்பா.. சபரிமலையில் மகரஜோதி .. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு.. 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்திக்.. கார் பரிசு!
{{comments.comment}}