தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மாசி 01 ம் தேதி வியாழக்கிழமை
இரவு 09.01 வரை பிரதமை, பிறகு துவிதியை. இரவு 09.47 வரை மகம் நட்சத்திரமும், பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை சித்தயோகம், பிறகு இரவு 09.47 வரை அமிர்தயோகம், அதற்கு பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 11 முதல் 12 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை 12 முதல் 01 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - உத்திராடம், திருவோணம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - எதிலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். விரைவாக முடிவு எடுப்பதை தவிர்த்து பொறுமை காக்க வேண்டும். பணிச்சுமை அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம் - சுமாரான நாளாக இருக்கும். இறை வழிபாடு மனதிற்கு ஆறுதலை தரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிகளை உரிய நேரத்தில் முடிப்பது சிரமமாக இருக்கும். வாழ்க்கை துணையிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கலாம்.
மிதுனம் - தைரியம், உறுதியுடன் இருந்து நன்மைகளை பெற வேண்டிய நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மேலதிகாரியால் பாராட்டப்படுவீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கடகம் - அதிக சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பணிச்சுமை அதிகரிக்கும். எதிலும் கவனம் தேவை. மற்றவர்களிடம் எரிச்சல், கோபத்தை காட்டாமல் இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். உணவு முறையில் கவனம் தேவை.
சிம்மம் - பொறுமையாக எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டும். பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனம். பொறுமையை சோதிக்கும் விஷயங்கள் நடக்கலாம். வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.
கன்னி - தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண வேண்டிய நாள். பணிகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பண புழக்கம் குறைந்து காணப்படும். செலவுகளை குறைப்பது நல்லது. கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.
துலாம் - முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள். பணிகளை உரிய நேரத்தில் முடித்து பாராட்டு பெறுவீர்கள். வாழ்க்கை துணையிடம் அன்பு அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்புக்கள் உயரலாம்.
விருச்சிகம் - லட்சியங்களை அடைவதற்கான வழிகளை தேடுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணிகளை விரைந்து முடித்து, பாராட்டு பெறுவீர்கள். வாழ்க்கை துணையிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். புதிய வருமான வாய்ப்புகள் ஏற்படலாம்.
தனுசு - எந்த விஷயத்தை லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டிய நாள்.
மகரம் - சுமாரான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை குறையலாம். இறைவழிபாடு ஆறுதல் தரும். பணிகளில் தாமதம் ஏற்படும். மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம் - உங்களின் முடிவுகள் சாதகமான பலன்களை தரும். பணியிடத்தில் சாதகமான சூழல் இருக்கும். புத்திசாலித்தனம் மற்றவர்களால் பாராட்டப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். இதனால் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
மீனம் - இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பணியிடத்தில் கடினமான சூழல் இருக்கும். வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். கூடுதல் செலவுகள் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.
அறிவாலயத்தை தொட்டுக்கூட பார்க்கமுடியாதவர் எப்படி செங்கலை பிடுங்க முடியும்?: அமைச்சர் சேகர்பாபு
Mood of the Nation Poll: திமுக கூட்டணி செல்வாக்கு கிடுகிடு உயர்வு.. 39 சீட்டுகளையும் அள்ளுமாம்!
Gold rate.. நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு.... எவ்வளவு தெரியுமா?
Mood of the Nation Poll: 300ஐ தாண்டும் தேஜகூ.. காங்கிரஸின் கையில் நடுக்கம்.. தளதளக்கும் தாமரை!
வாழ்க்கை ஓவியத்தை.. தேடித் தொலைந்து.. பூத்து சிலிர்த்து நிற்கின்றேன்.. உன் பார்வையின்.. தீண்டலுக்காக
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்.. விரைவில் பூமிக்குத் திரும்புவார்.. நாசா கொடுத்த அப்டேட்
Kiss Day 2025.. அன்பும் பாசமும் கலந்து முத்தமிடுவோம்.. இதழ்களில் மட்டுமல்ல.. இதயங்களிலும்!
விஷ்ணுபதி புண்ணிய காலம்.. நரசிம்மரை.. லட்சுமி தேவி அமைதிப்படுத்திய தருணம்!
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்.. அமெரிக்கா வந்தார் பிரதமர் மோடி..நாடு கடத்தலுக்கு முடிவு வருமா
{{comments.comment}}