தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், கார்த்திகை 28 ம் தேதி வெள்ளிக்கிழமை
திருக்கார்த்திகை தீபம், பிரதோஷம். இன்று மாலை 06.35 வரை திரியோதசி, அதற்கு பிறகு சதுர்த்தசி. காலை 06.50 வரை பரணி, பிறகு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.15 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை
இன்றைய ராசிபலன் :
மேஷம் - பழைய முதலீடுகள் லாபம் தரும். மறக்க முடியாத அனுபவங்கள் ஏற்படலாம். தொழிலில் உங்களின் பேச்சுக்கள் மூலம் மற்றவர்களை கவருவீர்கள். எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.
ரிஷபம் - வருமானம் உயரும். தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழுப்பிக் கொள்வதை தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட விஷயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது. பண விஷயத்தில் வாழ்க்கை துணையுடன் ஆலோசித்து முடிவு செய்வத நல்லது.
மிதுனம் - இன்ற பம்பரமாக சுழன்று வேலை செய்ய வேண்டி இருக்கும். வேலைகளுக்கு இடையே சற்று ஓய்வும் அவசியம். வரவு, செலவு இரண்டும் சமமாக இருக்கும். அதனால் பணத்தை செலவிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். தாயின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
கடகம் - இனிமையான நாளாக இருக்கும். மற்றவர்கள் உங்களின் உதவியை தேடி வருவார்கள். உறவுகளுடன் உறவை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அதே சமயம் உறவுகளிடம் கவனமுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
சிம்மம் - பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பெரிய மாற்றங்கள் வருவதற்கான காலம் இது. உங்களின் பணி மற்றவர்களால் பாராட்டப்படும். உணவில் கவனம் செலுத்துவது அவசியம். ஆரோக்கிய விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.
கன்னி - பரபரப்பான நாளாக இருக்கும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தினருடன் அன்பை பகிர்ந்து கொள்வது நல்லது. இன்று புதிய வேலைகளை துவங்குவதை ஒத்திவைப்பது சிறப்பு.
துலாம் - வாழ்க்கைக்கு தேவையான புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள். தம்பதிகள் மனம் விட்டு பேசுவது பல பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் சாதகமாக சூழல் நிலவும்.
விருச்சிகம் - மனதிற்கு மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். உங்களின் அர்ப்பணிப்பு குணம் மற்றவர்களால் பாராட்டப்படும். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
தனுசு - அடுத்தடுத்த வேலைகளால் பரபரப்பாக காணப்படுவீர்கள். காதல் அனபவங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும், மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி போன்ற பழக்கங்களால் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.
மகரம் - அன்பான உறவுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பாக எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம் - ஆபத்தான விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
மீனம் - அதிக மனஅழுத்தம் தரும் விஷயங்களை தவிர்க்க பாருங்கள். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை அவசியம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஈரோடு கிழக்கு.. படு விறுவிறுப்பாக நடைபெறும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு.. மக்களிடையே ஆர்வம்
ட்ரெய்லர் மட்டுமே பார்த்துவிட்டு.. இதுதான் என யூகிக்க வேண்டாம்.. விடாமுயற்சி நடிகை.. ஓபன் டாக்..!
ஓம் சரவணபவ.. வாழ்வில் வளம் பெற தை கிருத்திகை விரதம்.. பிப்ரவரி 6.. மறவாதீர்கள்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சூழல் மன்றங்கள்.. விரைவில் கொள்கை முடிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
No Uppuma.. பிரியாணியும் சிக்கன் பிரையும் வேணும்.. கலகலக்க வைத்த கேரள சிறுவன்.. அமைச்சர் சொன்ன பதில்
மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நேற்று குறைந்த தங்கம் விலை.. மீண்டும் அதிரடியாக இன்று உயர்வு
Valentine's day: உங்களோட X-ஐ கடுப்பாக்கணுமா.. காத்திருக்கும் கரப்பான் பூச்சிகள்.. அமெரிக்காவில் கலகல
{{comments.comment}}