12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 13, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Apr 13, 2025,11:32 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், பங்குனி 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

அதிகாலை 06.03 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. இரவு 09.01 வரை சித்திரை நட்சத்திரம், பிறகு சுவாதி நட்சத்திரம் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 03.30 முதல் 04.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


சந்திராஷ்டமம் -  பூரட்டாதி, உத்திரட்டாதி


இன்றைய ராசிபலன் :


மேஷம் - கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். திறமைகள் மூலம் மதிப்பு உயரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வெளிவட்டாரத்தில் கெளரவம் அதிகரிக்கும். தொல்லை நிறைந்த நாளாக இருக்கும்.


ரிஷபம் - உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சொத்து வழக்குகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். எந்த காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பரிவான நாள்.


மிதுனம் - சேமிப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணத்தால் ஏற்றம் உண்டாகும். செலவு நிறைந்த நாளாக இருக்கும். 


கடகம் - விலகிச் சென்ற உறவுகள் தேடி வருவார்கள். அரசு வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மறதியால் அலைச்சல் உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறுவதில் தாமதம் ஏற்படும். விமர்சன பேச்சுக்களை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் நீங்கும். பாராட்டு நிறைந்த நாள்.


சிம்மம் - ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளின் நலன் கருதி எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்யம் எண்ணம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தெளிவான நாள்.


கன்னி - வெளிப்படையான குணத்தால் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்வு நிறைந்த நாள் 


துலாம் -  சகோதரர் வகையில் ஆதாயம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்படவும். போட்டி நிறைந்த நாளாக இருக்கும். 


விருச்சிகம் - பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சில முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. நலம் நிறைந்த நாள்.


தனுசு - உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமகத்தால் மாற்றம் ஏற்படும். மதிப்பு அதிகரிக்கும்.  மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள். 


மகரம் - அரசு தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு மாற்றம் ஏற்படும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபார ரீதியாக இருந்து வந்த தடைகள் விலகும். பரிசு கிடைக்கும் நாள்.


கும்பம் -  அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். மேலதிகாரியுடன் இருந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வருவாயில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் அதிகரிக்கும். சிக்கல் மறையும் நாள். 


மீனம் - செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு பணிகளில் விவேகம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களே எச்சரிக்கையாக இருங்க.. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம்..!

news

பாஜக கூட்டணியால்.. அதிமுகவிலிருந்து விலகிட்டாரா.. டி. ஜெயக்குமார் தரப்பு சொல்லும் விளக்கம் இதுதான்!

news

ரஜினிகாந்த் வழிக்கு மாறிய அண்ணாமலை.. பாபா முத்திரையுடன் போஸ்.. ஆன்மீக பயணம்!

news

மீன் பிடி தடைக் காலம்.. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அறிவிப்பு..இன்று நள்ளிரவு முதல் அமல்!

news

இந்திய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளுக்கு.. கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

news

Vallarasu.. வல்லரசு வெளியாகி 25 வருடமாச்சு.. விஜயகாந்தின் அதிரடி ஆட்சி!

news

பெல்ஜியத்தில் வைத்து சிக்கினார் மெஹுல் சோக்சி.. ரூ. 14,000 கோடி மோசடி செய்த வைர வியாபாரி!

news

பீம் ஜோதியை ஏன் தடுக்கிறீர்கள்? .. நீங்கள் அம்பேத்கருக்கு எதிரானவரா.. டாக்டர் தமிழிசை கேள்வி!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 14, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்