12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 13, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 13, 2025,10:08 AM IST
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2025 ஆம் ஆண்டு மார்ச் 13 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய பஞ்சாங்கம் :

குரோதி வருடம், மாசி 29 ம் தேதி வியாழக்கிழமை
பெளர்ணமி. காலை 11.39 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது . காலை 05.09 வரை மகம் நட்சத்திரமும், பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.09 வரை சித்தயோகமும், பிறகு 06.22 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 

நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை

சந்திராஷ்டமம் -  உத்திராடம், திருவோணம்

இன்றைய ராசிபலன் :



மேஷம் -  நண்பர்களின் ஆலோசனையால் சிக்கல்கள் குறையும். உறவுகளின் ஒத்துழைப்பு திருப்தியை தரும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான அணுமுறைகள் மூலம் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். 

ரிஷபம் - ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திறமைக்கு ஏற்ற மதிப்புகள் உருவாகும்.

மிதுனம் - அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். சில சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படலாம். புதுமையான எண்ணங்கள் தோன்றும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.

கடகம் - குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கை அவசியம். வித்தியாசமான அணுகுமுறையால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். 

சிம்மம் - புதிய கலைகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி - எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறையும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிதானத்துடன் செயல்பட வேண்டும். உணவுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் எதிர்ப்புகள் குறையும். மனதில் ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர்களை அனுசரித்து நடக்கவும். சிரமம் குறையும் நாள்.

துலாம் -  மறைமுகமாக இருந்து வந்த போட்டிகள் விலகும். சகோதரர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். சுப காரியங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆதரவுகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஊக்கமான நாள்.

விருச்சிகம் - மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அடியான செயல்கள் மூலம் போட்டிகளில் வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நலம் நிறைந்த நாள்.

தனுசு - குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். லாபம் நிறைந்த நாளாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம் - எதிலும் ஆர்வம் இன்றி செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விவாதங்களை குறைப்பது நல்லது. புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும்.

கும்பம் -  உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கடினமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். சிந்தனையில் கவனம் வேண்டும். வாகன பயணங்களால் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.

மீனம் -  வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். இனம் புரியாத கவலைகளால் சோர்வுகள் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடமைகளில் கவனம் வேண்டும். எதிலும் அவசரமின்றி நிதானமாக செயல்படவும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்