தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், கார்த்திகை 27 ம் தேதி வியாழன்கிழமை
பரணி தீபம். இன்று இரவு 08.37 வரை துவாதசி, அதற்கு பிறகு திரியோதசி. காலை 08.19 வரை அஸ்வினி, பிறகு பரணி. காலை 06.19 வரை மரணயோகம், பிறகு காலை 08.19 வரை அமிர்தயோகம், அதன் பிறகு சித்தயோகம்.
நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.15 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - உத்திரம், அஸ்தம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - புதிய பொறுப்புகள் மூலம் உங்களின் தகுதிகளை நிரூபிக்க வேண்டிய காலம். பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்வீர்கள். நிதி நிலைமை சாதகமாக இருக்கும். எதிலும் நிதானத்துடன், நல்ல முடிவுகளை எடுக்க முயற்சி செய்யுங்கள்.
ரிஷபம் - குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள். மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஆரோக்கியத்தில் சற்ற கவனம் செலுத்துவது நல்லது. திறமைகள் வெளியப்படும்.
மிதுனம் - அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தொழில், பணம், தம்பதிகள் ஒற்றுமை, ஆரோக்கியம் என அனைத்தும் சிறப்பாக இருக்கும். இருந்தாலும் வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிலும் நிதானத்துடன் நடந்து கொள்வதால் மகிழ்ச்சி பாதிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.
கடகம் - சுறுசுறுப்பாக செயல்பட்டு பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். ஆரோக்கியத்தில் எப்போதும் கவனம் வைத்திருப்பது நல்லது. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள்.
சிம்மம் - ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உறவுகளுக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை தீர்க்க நினைப்பீர்கள். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கன்னி - மனதில் குழப்பங்கள் அதிகரிக்குள். வாழ்க்கை துணையுடன் நிதானத்துடனும், அன்பாகவும் நடந்து கொள்வது அன்பை பலப்படுத்தும். நிதி நிலை உயர்வதற்கான வழிகள் பிறக்கும். முதலீடுகள் தொடர்பான முடிவுகளை சிந்தித்து எடுப்பது நல்லது.
துலாம் - மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வாழ்க்கையில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கை துணையுடன் அதிக நேரம் செலவிட்டு, மனம் விட்டு பேச நினைப்பீர்கள். பணத்தை புத்திசாலித்தனமாக கையாள்வது சிறப்பு.
விருச்சிகம் - குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். வேலைகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
தனுசு - மகிழச்சிகரமான நாளாக இருக்கும். காதலில் இனிமை கூடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள். பணிகளில் சிறப்பாக செயலாற்றவீர்கள். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
மகரம் - வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணத்தை முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். உடல்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம் - வாழ்க்கை துணையுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மீனம் - இனிமையான நாளாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலக பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உயரதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை என்ன தெரியுமா?
Gold rate.. ஏற்றமும் இல்லை, இறக்கமும் இல்லை... தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!
இயக்குநர் சீனு ராமசாமியும் டைவர்ஸ்.. 17 வருட திருமண வாழ்விலிருந்து விடைபெறுவதாக அறிவிப்பு!
HBD Rajinikanth.. 75வது பிறந்த நாள்.. தலைவர்கள், திரையுலகின் வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 12, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
{{comments.comment}}