12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 12, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 12, 2025,11:02 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 28 ம் தேதி புதன்கிழமை

மாசி மகம். காலை 10.50 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது . அதிகாலை 03.52 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 01.30 முதல் 02.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் -  பூராடம், உத்திராடம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். 


ரிஷபம் - செயல்களில் இருந்த இழுபறியான சூழல் மாறும். நண்பர்கள் மூலம் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வேலை தொடர்பான முயற்சிகள் கை கூடும். தொழிலில் சாதகமான சூழல் அமையும். பயணங்கள் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். தாய் வழி உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


மிதுனம் - அலுவலகத்தில் சாதகமான சூழல் அமையும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். நிதானமான செயல்பாடுகள் எதிர்ப்புகளை குறைக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நிறைவான நாளாக இருக்கும். 


கடகம் - பழைய நினைவுகளால் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். உதவிகளால் அலைச்சல்கள் ஏற்படும். எதிர்ப்புகள் விலகி சிறு தூர பயணம் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படலாம். உடன் இருப்பவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்க வேண்டும். பாராட்டு கிடைக்கும் நாள்.


சிம்மம் - புதிய வேலை பற்றி சிந்தனை அதிகரிக்கும். சமூக பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும். எதிலும் தற்பெருமை இன்றி நடந்து கொள்வது நல்லது.


கன்னி - உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதுமையான சிந்தவைகள் அதிகரிக்கும். இன்பமான நாளாக இருக்கும்.


துலாம் -  மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். சகோதர வழியில் அனுகூலம் ஏற்படும். குடும்ப உறப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும்.சோர்வு நிறைந்த நாளாக இருக்கும். நுட்பமான வினுயங்களை புரிந்து கொள்வீர்கள்.


விருச்சிகம் - வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சிந்தனை திறன் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் பயணம் சென்று வருவீர்கள். நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். 


தனுசு - ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் விவாதங்கள் தோன்றி மறையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பழைய பிரச்சனைகள் குறையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில ஆதரவுகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.


மகரம் - பண வரவில் ஏற்ற, இறக்கமான சூழல் காணப்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உதவிகள் செய்யும் போது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களால் சோர்வுகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும்.


கும்பம் -   பொருளாதார ரீதியான சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகள் முடியும். நெருக்கமானவர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.


மீனம் -  மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வத்தலகுண்டு அருகே அமையவிருந்த டோல்கேட்... அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

news

நிறைய மொழிகள் கத்துக்கலாம்.. தப்பில்லை.. எனக்கு 8 மொழிகள் பேசத் தெரியும்.. சொல்கிறார் சுதா மூர்த்தி

news

புதுச்சேரி முதல்வரின் சூப்பர் அறிவிப்பு.. மகளிர் உதவித் தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2500 ஆக உயர்வு!

news

செளந்தர்யா விபத்தில் மரணிக்கவில்லையா.. கொலை செய்யப்பட்டாரா?.. புதிய புகாரால் திடீர் பரபரப்பு

news

கார் வாங்க போறீங்களா.. பார்க்கிங் செய்ய இடம் இருக்கா?.. சென்னையில் போக்குவரத்து ஆணையம் அதிரடி!

news

என் கணவர் படத்திற்கு மட்டும்.. ஏன் இவ்வளவு கடுமையான விமர்சனம்.. நடிகை ஜோதிகா ஆதங்கம்!

news

குளுகுளு வானிலை.. தமிழ்நாட்டில் கனமழைக்கும், மிதமான மழைக்கும் வாய்ப்பு..!

news

தொகுதி மறு சீரமைப்பு, ஹிந்தி திணிப்பு: திமுக சார்பில்.தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன பொதுக்கூட்டம்

news

தொகுதி மறுசீரமைப்பு: பல்வேறு மாநில தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த.. தமிழக அமைச்சர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்