12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 11, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 11, 2025,10:00 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மார்ச் 11 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 27 ம் தேதி செவ்வாய்கிழமை

பிரதோஷம்.  காலை 10.30 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது . அதிகாலை 03.07 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 01.30 முதல் 02.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் -  மூலம், பூராடம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக நிறைவேறும். பயணங்களில் சுகமான அனுபவங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பண வரவுகள் கிடைக்கும். புது வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.


ரிஷபம் - குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தந்திரமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோக பணிகளில் இடமாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். வரவு நிறைந்த நாளாக இருக்கும்.


மிதுனம் - தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். செயல்களில் இருந்த தடைகள் குறையும். சக ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத வரவுகளால் நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அனுசரித்து நடப்பது நல்லது.


கடகம் - நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிராமல் இருப்பது நல்லது. உயர் அதிகாரிகளால் அலைச்சலும் ஆதாயமும் ஏற்படும். ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும்.


சிம்மம் - வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனைகளின் போக்கில் கவனம் தேவை. வியாபாரத்தில் யோசித்து முடிவு எடுக்கவும். பயணற்ற கருத்துக்களை தவிர்க்கவும். ஓய்வு வேண்டிய நாளாக இருக்கும்.


கன்னி -  குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். செல்வ சேர்க்கை குறித்த சிந்தனை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய தொழில் தொடர்பான முயற்சிகள் கைகூடும். அரசு பணிகளில் அனுகூலம் ஏற்படும். அமைதி நிறைந்த நாளாக இருக்கும். 


துலாம் -  நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பும், உயர்வும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய முதலீடுகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அனுபவம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். 


விருச்சிகம் - ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை ஏற்படும். தந்தை வழி உறவுகளின் ஆதரவுகள் கிடைக்கும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். சாமர்த்தியமாக செயல்பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். சிக்கல்கள் குறையும்.


தனுசு - உடல் ஆரோக்கியம் சீராகும். தந்தை வழி ஆதரவுகள் அதிகரிக்கும். இழுபறியான சில வரவுகள் வசூலாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புரிதல் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மனதில் தெளிவு ஏற்படும்.


மகரம் - பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சுப காரிய முயற்சிகள் கை கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டு பெறுவீர்கள். பக்தி நிறைந்த நாளாக இருக்கும்.


கும்பம் -   உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். தம்பத்திகளுக்குள் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். ஆசைகள் நிறைந்த நாள்.


மீனம் -  வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை அதிகரிப்பீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பண நெருக்கடிகள் குறையும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் விட்டு விட்டு வச்சு செய்யும் கனமழை .. 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

news

நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக மத்திய அரசை கண்டித்து.. தமிழக எம்பிக்கள் கண்டனம் முழக்க போராட்டம்!

news

தமிழ்நாட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்த மழை.. இன்றும், நாளையும் பரவலாக மழை.. தமிழ்நாடு வெதர்மேன்!

news

ஐ.பி.எல் விளம்பரம் பாமகவிற்கு கிடைத்த வெற்றி.. பாமக தலைவர் அன்புமணி பெருமிதம்..!

news

Power of Biryani.. டி.எம்.எஸ்-ஸோட வெண்கலக் குரலின் ஈர்ப்புக்கு காரணம் என்ன தெரியுமா??

news

மதுபான ஊழல்.. காலையிலேயே அண்ணாமலை போட்ட X குண்டு.. என்ன சொல்ல வருகிறார்?

news

மொரீசியஸில் பிரதமர் நரேந்திர மோடி.. ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு!

news

இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா.. கவலைப்படாதீங்க...இயற்கை முறையில் ஈஸியா விரட்டலாம்!

news

முதலீட்டாளர்களுக்கு முதல் முகவரி தமிழகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்