12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Apr 10, 2025,11:48 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், பங்குனி 27ம் தேதி வியாழக்கிழமை

பிரதோஷம். அதிகாலை 01.16 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. பகல் 02.06 வரை பூரம் நட்சத்திரம், பிறகு உத்திரம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.05 வரை அமிர்தயோகம், பிறகு பகல் 02.06 வரை சித்தயோகம், அதற்கு பிறகு மரணயோகம் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் பகல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் -  திருவோணம், அவிட்டம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - சிந்தித்து செயல்படுவதால் நன்மைகள் அதிகரிக்கும். விலகி சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவார்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவார்கள் இருப்பார்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.


ரிஷபம் - மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய துறைகளில் ஆர்வம் உண்டாகும். கல்வி பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இழுபறியாக இருந்து வந்த வழக்கு முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். லாபம் நிறைந்த நாளாக இருக்கும். 


மிதுனம் - இழுபறியான பாகப்பிரிவினை கைகூடும். வேலை செய்யும் இடத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழுப்பங்கள் நீங்கி அமைதி கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். குழப்பம் விலகும் நாளாக இருக்கும்.


கடகம் - புதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில அனுபவங்கள் மூலம் புதுமையான சூழல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.


சிம்மம் - குணநலன்களில் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான எண்ணம் பிறக்கும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தும் சூழல் உருவாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். அசதியான நாளாக இருக்கும்.


கன்னி - மனம் விரும்பிய செயல்களை செய்த முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். விட்டுக் கொடுத்து செல்லவும். வெளியூர் பயணங்கள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாளாக இருக்கும். 


துலாம் -  சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தம்பதிகள் அனுசரித்து செல்ல வேண்டும். நட்பு வட்டம் விரிவடையும். பொன், பொருள் சேர்க்கையில் கவனம் வேண்டும். வெளிவட்டார மதிப்பு உயரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். இன்னல்கள் அகலும். அமைதி வேண்டிய நாளாக இருக்கும்.


விருச்சிகம் - குடும்பத்தில் ஒத்துழைப்பு இருக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொலைதூர பயணங்கள் சாதகமாகும். சாஸ்திரம் தொடர்பான தெளிவு பிறக்கும். வெற்றியான நாளாக இருக்கும்.


தனுசு - நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். ஆன்மிகம் சார்ந்த காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் இருந்து வந்த வருத்தம் நீங்கும். உடலில் ஒரு விதமான சோர்வு ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.


மகரம் - கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். அமைதி வேண்டிய நாளாக இருக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.


கும்பம் -  சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குழந்தைகள் மூலம் மதிப்பு உயரும். வாழ்க்கை துணை வழியில் நல்ல செய்தி கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுக்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் முயற்சிகள் கைகூடும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.வரவு நிறைந்த நாள்.


மீனம் - குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகம். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். புகழ் நிறைந்த நாளாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

news

நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி

news

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!

news

ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!

news

இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!

news

சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!

news

பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்