தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு மார்ச் 10 ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மாசி 26 ம் தேதி திங்கட்கிழமை
ஏகாதசி, சுபமுகூர் நாள். காலை 10.43 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது . அதிகாலை 02.50 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 9 முதல் 10 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - சிக்கனத்துடன் செயல்படுவதால் நெருக்கடிகள் குறையும். வாகன பயணங்களில் நிதானம் தேவை. எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புதிய விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். மனதில் இருந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் காரணப்படுவீர்கள். தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். பெரியவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
ரிஷபம் - செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வழக்குகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் கை கூடும். நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும்.
மிதுனம் - எதிர்பாராத பண வரவுகள் ஏற்படும். தம்பதிகளுக்கும் அன்பு அதிகரிக்கும். மனதை உறுத்திய கவலைகள் விலகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. ஆதாயம் நிறைந்த நாளாக இருக்கும்.
கடகம் - அக்கம், பக்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணம் மேற்கொள்ளலாம். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்கால சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும். தடைகள் விலகும் நாள்.
சிம்மம் - உணவு பழக்கங்களில் கவனம் தேவை. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறையால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதுமையான சிந்தனைகளால் மாற்றம் உருவாகும். ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி - எதிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். நெருக்கமானவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த பணம் தொடர்பான உதவிகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் லாபம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
துலாம் - விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். திடீர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான இலக்குகளை உருவாக்குவீர்கள். இழுபறியான பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும்.
விருச்சிகம் - உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத அலைச்சல்களால் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும்.
தனுசு - உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். அமைதி வேண்டிய நாள்.
மகரம் - மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாளாக இருக்கும்.
கும்பம் - எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பயணங்களில் லாபம் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, அமைதி கிடைக்கும். விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
மீனம் - கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் வருகையால் புத்துணர்ச்சி அதிகரிக்கும். தொழலில் உயர்வு ஏற்படும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். இரக்கம் நிறைந்த நாளாக இருக்கும். பணிகளில் புதிய சிந்தனைகள் அதிகரிக்கும்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}