தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 09 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 25 ம் தேதி வியாழக்கிழமை
கிருத்திகை. பகல் 12.03 வரை தசமி, பிறகு ஏகாதசி. மாலை 03.05 வரை பரணி, பிறகு கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. மாலை 03.05 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை
இன்றைய ராசிபலன் :
மேஷம் - நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கையை மாற்றக் கூடிய சில முக்கிய பொறுப்புக்கள் தேடி வரலாம். இதனால் நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் மன விட்டு பேசி மகிழ்வீர்கள்.
ரிஷபம் - பண வரவு அதிகரிக்கும், தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். புத்திசாலித்தனமாக சிக்கலை தீர்ப்பீர்கள். மன அழுத்தம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
மிதுனம் - திறமை வெளிப்படும். கடினமாக உழைத்து தொழிலில் சவால்களை சமாளிப்பீர்கள். பணப் பிரச்சனை தீரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும்.
கடகம் - மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு நன்றாக இருப்பதால் பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள்.
சிம்மம் - கணவன்-மனைவி பிரச்சனைகளை பேசி தீர்ப்பதும், அனுசரித்து செல்வதும் நல்லது. அலுவலகப் பணிகளில் நல்ல பலன்களை பெற முடியும். பண வரவு நன்றாக இருக்கும். உடல் நிலை நன்றாக இருக்கும்.
கன்னி - அன்புக்குரியவர்கள் மீது கவனம் செலுத்துவது அவசியம். வேலைகளில் இருந்த சவால்கள் குறையும். வாழ்க்கை துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். எதையும் சிந்தித்து கவனமாக கையாள்வது நல்லது.
துலாம் - சாதகமான நாளாக இருக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கை முறையில், பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்துவது அவசியம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம் - உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாய்ப்புகளை பயன்படுத்தி அலுவலகத்தில் திறமையை காட்டுவீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு - சவால்களும், வாய்ப்புகளும் நிறைந்த நாளாக இருக்கும். வரும் வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்தி, வெற்றிகரமாக மாற்றி, வளர்ச்சிக்கான பாதையில் அடி எடுத்து வைக்க முயற்சி செய்வீர்கள். வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படலாம்.
மகரம் - தைரியம் மற்றும் ஆர்வமான அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்கும். உணவில் கவனம் தேவை. பிரச்சனைகளை நேர்மையான முறையில் தீர்க்க முயற்சி செய்வீர்கள். புதியவர்களின் அன்பு கிடைக்கும்.
கும்பம் - புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். பண விஷயங்களில் கவனமாக இருக்கு வேண்டும். பணத்தை எச்சரிக்கையுடன் செலவிட வேண்டும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.
மீனம் - வாழ்க்கை துணையுடனான பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்வீர்கள். அலுவலகத்தில் திறமையை வெளிக்காட்ட முயற்சி செய்வீர்கள். பணத்தை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். மன அழுத்ததம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CSK vs KKR.. அப்பாடி ஒரு வழியா நூறைக் கடந்துட்டாங்கய்யா.. கடும் ஏமாற்றத்தைக் கொடுத்த சிஎஸ்கே
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}