தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு மார்ச் 09 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மாசி 25 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
காலை 11.24 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது . அதிகாலை 03.01 வரை திருவாதிரை நட்சத்திரமும், பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 01.30 முதல் 2 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
சந்திராஷ்டமம் - அனுஷம், கேட்டை
இன்றைய ராசிபலன் :
மேஷம் - மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். செயல்களில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். கடன் பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.
ரிஷபம் - வியாபாரத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்புகள் மூலம் ஆதாயம் ஏற்படும். குடும்ப பெரியவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிப்பது நல்லது. சுப காரிய முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
மிதுனம் - புதிய நபர்களின் அறிமுகத்தால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். பழைய நினைவுகளால் சோர்வுகள் ஏற்படும் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பயணங்களின் போது நிதானம் அவசியம். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
கடகம் - உறவினர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆடம்பர செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய தெளிவை ஏற்படுத்தும். தெய்வீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். முக்கியமான விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
சிம்மம் - எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களில் நன்மைகள் உண்டாகும். வீட்டு தேவைகள் நிறைவேறும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.
கன்னி - நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். ரகசியமான செயல்பாடுகளால் மூலம் உயர்வான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவியால் பொருளாதாரம் உயரும்.
துலாம் - திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவினர்கள் வழியில் அலைச்சலும் ஆதாயமும் கிடைக்கும்.
விருச்சிகம் - சிந்தனையில் குழப்பங்கள் ஏற்படும். பணி நிமித்தமான பொறுப்புகளும் அலைச்சலும் அதிகரிக்கும். ஆதரவாக இருந்தவர்கள் விலகிச் செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படலாம். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். விதானம் வேண்டிய நாள்.
தனுசு - பொருளாதார நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தள்ளிப் போன சில காரியங்கள் மீண்டும் நடைபெறும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சக ஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வரவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.
மகரம் - வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலைகள் குறையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் சற்று குறையும். உறவினர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தடைகள் மறையும் நாளாக இருக்கும்.
கும்பம் - எண்ணிய காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விவேகமான சிந்தனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறு தூர பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வெற்றிகள் கிடைக்கும் நாளாக இருக்கும்.
மீனம் - உடன் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. பிரபலங்களில் அறிமுகங்கள் புதிய நம்பிக்கையை தரும். பயணங்கள் மூலம் சில மாற்றமான சூழல் உண்டாகும். புகழ் நிறைந்த நாளாக இருக்கும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}