12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 08, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Apr 08, 2025,11:10 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 08 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், பங்குனி 25ம் தேதி செவ்வாய்கிழமை

ஏகாதசி. அதிகாலை 12.12 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. காலை 11.18 வரை ஆயில்யம் நட்சத்திரம், பிறகு மகம் நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை 

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் -  பூராடம், உத்திராடம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பல தரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் சில தந்திரங்களை செய்வீர்கள். மனதில் இருக்கும் நீண்ட ஆசைகள் நிறைவேறும். 


ரிஷபம் - எதிர்கால முடிவுகளில் பொறுமை வேண்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சனை தீரும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.


மிதுனம் - முதலீடுகளில் கவனம் வேண்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தியான பயிற்சிகளை செய்வதால் மனசங்கடம் குறையும். மூத்த சகோதரர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். 


கடகம் - வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். மனை தொடர்பான பணிகளில் ஆதாயம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் உயர்வு ஏற்படும். ஆதரவு நிறைந்த நாளாக இருக்கும். சிந்தனையில் மாற்றம் ஏற்படும்.


சிம்மம் - குடும்ப உறப்பினர்கள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளில் விவேகம் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூல பலன்கள் உண்டாகும். விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும். விட்டுக் கொடுத்து செல்லவும்.


கன்னி - தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். இடம் மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். செயல்களில் இருந்த கட்டுப்பாடுகள் குறையும். கவனம் வேண்டும்.


துலாம் -  வரவுகளில் சேமிப்புகள் உயரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணைய வழியில் புதிய வாய்ப்புகள்  கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். மனதில் இருந்த கவலைகள் குறையும். மனதில் புதிய ஆசைகள் ஏற்படும்.


விருச்சிகம் - தாயின் ஆரோக்கியம் சீராகும். வாழ்க்கை துணையால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். 


தனுசு - வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். மனை விற்பனையில் நிதானத்துடன் செயல்படவும். மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். சகோதர வழியில் சுப செய்திகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


மகரம் - நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். பலதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் விற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.


கும்பம் -  கூட்டளின் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் உண்டாகும். சமூக பணிகளில் ஆதரவு உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் ஆதரவு கிடைக்கும். எதிலும் கவனம் வேண்டும். வெளிப்படையான குணத்தினால் மதிப்புகள் உயரும். நண்பர்களுடன் தொலைதூர பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். உதவியான நாள்.


மீனம் - இல்லத்தில் சுப காரியம் நடைபெறும். பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தாமதம் நிறைந்த நாள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாநில உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து ஆராய ஜோசப் குரியன் தலைமையில் குழு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதிமுக பொதுக்குழு கூட்டம் மே 2ல் நடைபெறும்:எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு!

news

நெல்லையில்.. சக மாணவரை வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது? டாக்டர். அன்புமணி

news

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில்..பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு..!

news

ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்!

news

இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

கோடை விடுமுறையை முன்னிட்டு.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க எஸ்இடிசி முடிவு..!

news

சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்.. அன்போடு அழைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!

news

பாமகவில் உட்கட்சி பூசல்கள் சரியாகி விட்டது.. கௌரவத் தலைவர் ஜி கே மணி தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்