12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 07, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Jan 07, 2025,09:57 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜனவரி 07 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மார்கழி 23 ம் தேதி செவ்வாய்கிழமை

மாலை 04.36 வரை அஷ்டமி, பிறகு நவமி. மாலை 06.15 வரை ரேவதி, பிறகு அஸ்வினி நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.  


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 01.30 முதல் 02.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


சந்திராஷ்டமம் -  பூரம், உத்திரம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - எதிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். எடுக்கும் காரியங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி வரும். பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது. வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பணப் புழக்கம் குறைவாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கப்பதால் பணத்தை சேமிக்க முடியாத நிலை ஏற்படலாம்.


ரிஷபம் - சாதகமான நாளாக இருக்கும். வேலையில் சவால்கள் அதிகமாக இருக்கும். வாழ்க்கை துணையிடம் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். சேமிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.


மிதுனம் - பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் அனெயோன்யம் அதிகரிக்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.


கடகம் - சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். இலக்குகளை அடைய கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உடன் இருப்பவர்ளிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையிடம் பேசும் போது வார்த்தையில் கவனம் தேவை. பண வரவு சுமாராக இருக்கும். கால்களில் வலி போன்றவை ஏற்படும்.


சிம்மம் - இறைவழிபாடு மூலம் ஆறதல் அடைய வேண்டிய நாள். எதிலும் வெற்றியை பெற கடுமையாக உழைக்க வேண்டும். வாழ்க்கையுடன் வாக்கு வாதங்கள் ஏற்படலாம் கவனம். பணத்தை சேமிக்கு முயற்சிகள் ஈடேறும்.கண்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 


கன்னி - முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு மிகவும் ஏற்ற நாளாக இருக்கும். பணிகளை முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கமிடையே புரிதல் அதிகரிக்கும்.


துலாம் - பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். இதனால் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணவரவு அதிகரிக்கும். 


விருச்சிகம் - வளர்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மனம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணிகளை உரிய நேரத்தில் முடித்து, உயரதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சுமாராக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும்.


தனுசு - சிறப்பான நாளாக இருக்கும். இலக்குகளை அடைவீர்கள். திருப்தியான சூழல் நிலவும். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். இதனால் இருவரிடையே அன்பு அதிகரிக்கும்.


மகரம் - சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உடன் இருப்பவர்களின் ஆதரவு புதிய உற்சாகத்தை தரும். வாழ்க்கை துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பணவரவு அதிகரிக்கும். எதிர்கால தேவைக்காக பணத்தை சேமிப்பீர்கள். 


கும்பம் - முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற நாள். எடுத்த காரியங்களை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் போவதால் கவலை அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டம்.


மீனம் - சுமாரான நாளாக இருக்கும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பத நல்லது. பணியிடத்தில் பணிகளை பொறுமையாகயும், கவனமாகவும் செய்ய வேண்டும். உடன் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையிடம் அனுசரித்து செல்ல வேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Gold rate.. கடந்த 3 நாட்களாக அமைதிகாத்த தங்கம் விலை... இன்று திடீர் உயர்வு...!

news

திமுக போராடினால் வழக்கு.. பாமக போராடினால் கைதா? .. ஆஹா.. நல்லா இருக்கே .. டாக்டர் அன்புமணி

news

ISRO.. கன்னியாகுமரியிலிருந்து.. இன்னொரு இஸ்ரோ தலைவர்.. யார் இந்த வி. நாராயணன்?

news

அண்ணாநகர் பாலியல் வழக்கு.. அதிமுக செயலாளர் அதிரடி கைது.. கட்டப் பஞ்சாயத்து செய்த கொடுமை!

news

இஸ்ரோவின் தலைவராக வி. நாராயணன்.. மகிழ்ச்சி தரும் செய்தி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 08, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Erode East.. ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியா.. புறக்கணிப்பா.. ஜனவரி 11ல் முக்கிய முடிவு!

news

Erode East by election.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுக்கு சீட் தரப்படுமா.. காங். நிலை என்ன?

news

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : விஜய் கட்சியின் நிலைப்பாடு என்ன.. போட்டியிடுமா? போட்டியிடாதா?

அதிகம் பார்க்கும் செய்திகள்