தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், பங்குனி 24ம் தேதி திங்கட்கிழமை
சுப முகூர்த்த நாள். அதிகாலை 12.25 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 10.39 வரை பூசம் நட்சத்திரம், பிறகு ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 06.30 முதல் 07.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30
கெளரி நல்ல நேரம் : காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். அரசு பணிகளில் அனுகூலம் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.
ரிஷபம் - உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனை கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
மிதுனம் - வெளியூர் பயணங்களால் புதிய அனுபவங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். கல்வி பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். தோல்வி விலகும்.
கடகம் - வாழ்க்கை துணையுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அக்கம்,பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பணிகளை திட்டமிட்டு செயல்படுவீர்கள். பயணங்களால் மனதில் மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தைரியம் ஏற்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
சிம்மம் - பண வருவாயில் ஏற்ற, இருக்கமான சூழல் காணப்படும். இயந்திர பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப விவகாரங்களை பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். பயணங்களால் அனுபவம் ஏற்படும். நன்மையான நாள்.
கன்னி - சமூக பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். தொழிலில் உயர்வு உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உயர்வான நாள்.
துலாம் - வியாபாரத்தில் லாபம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் தவறிய வாய்ப்புகள் கிடைக்கும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகளை குறைக்க நினைப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும் பயம் நீங்கும்.
விருச்சிகம் - வாழ்க்கை துணையின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நுட்பமான செயல்களில் ஆர்வம் ஏற்படும். தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கல்வி பணிகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். தேர்ச்சி பிறக்கும்.
தனுசு - பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்களில் சோர்வு ஏற்படும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை தவிர்க்கவும். வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். அனுபவம் வேண்டிய நாளாக இருக்கும்.
மகரம் - புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வேலைகளில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல்,வாங்கலில் கவனம் வேண்டும். செயல்களில் நன்மை உண்டாகும்.
கும்பம் - சுபகாரியம் தொடர்பாக விரயங்கள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆன்மிக காரியங்களில் மன அமைதி உண்டாகும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தேவையற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும். பிரியமானவர்களின் சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்காலம் பற்றி முடிவு எடுப்பீர்கள்.
மீனம் - உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். கற்பனை சார்ந்த விஷயங்கள் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களில் ஆதாயம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்த வந்த இழுபறி குறையும். நிம்மதி நிறைந்த நாளாக இருக்கும்.
Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?
தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!
நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!
நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!
இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!
மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!
உலகமே எதிர்பார்க்கும் அஜித்தின் குட் பேட் அக்லி நாளை வெளியீடு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
{{comments.comment}}