தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 06 ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 22 ம் தேதி திங்கட்கிழமை
மாலை 06.56 வரை சப்தமி, பிறகு அஷ்டமி. இரவு 07.53 வரை உத்திரட்டாதி, பிறகு ரேவதி நட்சத்திரம் உள்ளது. காலை 06.31 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 09.45 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 01.30 முதல் 02.30 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
சந்திராஷ்டமம் - மகம், பூரம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். அலுவலகத்தில் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறி நிலை மாறும்.
ரிஷபம் - விலகி சென்ற உறவினர்கள் வழிய வந்து பேசுவார்கள். சுற்று இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். புதிய வீடு குடியேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கம். பிள்ளைகள் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை ஏற்படும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
மிதுனம் - பங்குகள் மூலம் பணம் வரும். வாழ்க்கை துணை வழியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். செலவுகள் அதிகரிக்கலாம். நண்பர்களின் உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும்.
கடகம் - பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பெரிய மனிதர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சிம்மம் - சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய நபர்களை சந்திப்பதை தவிர்ப்பது நல்லது. இன்று சுப காரியங்களை தள்ளி வைப்பதும், வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதும் நல்லது. இறை வழிபாட்டின் மூலம் நிம்மதி காண வேண்டிய நாள்.
கன்னி - எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
துலாம் - வீடு, மனை வாங்குவது, விற்பதில் லாபம் கிடைக்கும். அப்பாவின் உடல் நலம் சீராகும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்ளிடம் கனிவாக பேசுவது நல்லது.
விருச்சிகம் - அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். தடைகள் விலகும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பணவரவு திருப்தியாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
தனுசு - தம்பதிகளிடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள். மனஇறுக்கம், அசதி, வந்து போகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். முடிவுகள் எடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும்.
மகரம் - கணவன்-மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வீர்கள். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். கெளரவ பதவிகள் தேடி வரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வீர்கள்.
கும்பம் - உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். கலைஞர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். வீடு மாற வேண்டிய சூழல் சிலருக்கு ஏற்படலாம். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பணவரவு நன்றாக இருக்கும்.
மீனம் - அரசு காரியங்கள் இழுபறியாகும். வழக்கில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்க முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Erode East.. ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியா.. புறக்கணிப்பா.. ஜனவரி 11ல் முக்கிய முடிவு!
Erode East by election.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுக்கு சீட் தரப்படுமா.. காங். நிலை என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : விஜய் கட்சியின் நிலைப்பாடு என்ன.. போட்டியிடுமா? போட்டியிடாதா?
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு கடும் எதிர்ப்பு... மதுரை தமுக்கத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்த விவசாயிகள்!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி இடைத் தேர்தல்.. அறிவித்தது தேர்தல் ஆணையம்
விடை பெற்றார் ஜஸ்டின்.. அடுத்த பிரதமர் யார்.. கனடாவை அடுத்து ஆளப் போவது ஒரு தமிழ்ப் பெண்?
துணைவேந்தர் நியமனம்.. யுஜிசியின் புதிய விதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
ஆளுநர் ஆர். என். ரவியைக் கண்டித்து.. திமுகவினர் ஆர்ப்பாட்டம்.. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு!
நேபாளத்தை உலுக்கிய 7.1 ரிக்டர் பூகம்பம்.. பலர் பலி.. டெல்லியும் ஆடியதால் மக்கள் அதிர்ச்சி
{{comments.comment}}