தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 06 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 24 ம் தேதி வியாழக்கிழமை
தை கிருத்திகை. அதிகாலை 03.20 வரை அஷ்டமி, பிறகு நவமி. இரவு 09.53 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.35 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை -கிடையாது
கெளரி நல்ல நேரம் : கிடையாது; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம் - சிறப்பான நாளாக இருக்கும். தொழிலில் வெற்றி ஏற்படும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலுவையில் இருக்கும் அனைத்து பணிகளை முடிக்க நினைப்பீர்கள். நம்பிக்கை அதிகரிக்கும்.
மிதுனம் - திடீர் பணவரவுகள் ஏற்படும். இதனால் மறக்க முடியாத நாளாக இருக்கும். தொழிலில் மும்முரமாக செயல்படுவீர்கள். வரவுகள் நன்றாக இருந்தாலும் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.
கடகம் - நல்ல நாளாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவது வேறுபாடுகளை நீக்கும். தொழிலில் பரபரப்பாக காணப்படுவீர்கள். அவசர வேலைகள் வர வாய்ப்புள்ளது.
சிம்மம் - மேலதிகாரிகளிடம் வாக்குவாததத்தில் ஈடுபட வேண்டாம். பொருளாதாரம் நன்றாக இருக்கும். மன அழுத்தம் ஏற்படலாம். வாழ்க்கை துணையுடன் சிறு சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். வார்த்தைகளில் நிதானம் காப்பது நல்லது.
கன்னி - சுமாரான நாளாக இருக்கும். பொருளாதாரம் சுமாராக இருக்கும். செலவுகளை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
துலாம் - மாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள். மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
விருச்சிகம் - மகிழ்ச்சியான நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் ஏற்படலாம். அமைதியை கடைபிடிக்க வேண்டும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு - திறமைகளை நிரூபிக்க பொறுப்புக்களை கவனமாக நிறைவேற்ற வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரம் நன்றாக இருக்கும். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.
மகரம் - பணம் தொடர்பான விவகாரங்கள் சாதகமாகும். புதியவர்களின் நட்பு ஏற்படும். தொழிலில் பொறுப்புக்கள் அதிகரிக்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
கும்பம் - சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் திறமைகள் வெளிப்படும். வாழ்க்கை துணை விஷயத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அலுவலகத்தில் சிறு சவால்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எதையும் திறமையுடன் நிதானமாக கையாள்வது நல்லது.
மீனம் - நல்ல நாளாக இருக்கும். அதிக வாய்ப்புக்களை தேடுவீர்கள். பணவரவு ஏற்படும். தொழிலில் சாதகமான பலன்கள் ஏற்படலாம். திறமைகளை நிரூபிக்க முயற்சி செய்வீர்கள். பதற்றமின்றி பணியாற்றுவது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
{{comments.comment}}