12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 06, 2025,10:21 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மார்ச் 06 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 22 ம் தேதி வியாழக்கிழமை

வளர்பிறை அஷ்டமி. வாஸ்து நாள். மாலை 03.55 வரை சப்தமி, பிறகு அஷ்டமி திதி உள்ளது . காலை 04.54 வரை கிருத்திகை  நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 04.54 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 06.26 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் -  சித்திரை, சுவாதி




இன்றைய ராசிபலன் :


மேஷம் -  பொருளாதாரம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். பேச்சுத் திறமையால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப சூழல் அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்ற பொலிவு அதிகரிக்கும். நலம் நிறைந்த நாளாக இருக்கும்.


ரிஷபம் - மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். செயல்களை திட்டமிட்டு செய்யவும். புது விதமான துறைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத அலைச்சல்களால் சோர்வு ஏற்படலாம். சிலரால் நெருக்கடியான சூழல் ஏற்படலாம்.


மிதுனம் - உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதியவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கனிவான பேச்சுக்களால் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உணர்ச்சி வசப்படாமல் நடந்து கொள்ள வேண்டும். சுபகாரிய செலவுகள் அதிகரிக்கலாம்.


கடகம் -  புதிய வேலை வாய்ப்பு ஏற்படலாம். தொழிலில் லாபகரமான சூழல் அமையும். வேலையில் இருந்த குழப்பங்கள் குறையும். பெரியவர்களின் ஆலோசனை மனதில் தைரியத்தை கொடுக்கும். மூத்த உடன் பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். 


சிம்மம் - வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். தவறிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் விவேகம் வேண்டும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும் நாளாக இருக்கும். 


கன்னி -  பண வரவில் இருந்த தடைகள் குறையும். எதிர்பாராத சில முன்னேற்ற வாய்ப்புகள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புனி தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். ஆதரவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். 


துலாம் -  வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். உறவினர்களிடம் சூழல் அறிந்து அனுசரித்து நடக்க வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையாக செல்படவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும்.


விருச்சிகம் - மனதிற்கு நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நீங்கி, முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். உதவிகள் கிடைக்கும் நாளாக இருக்கும்.


தனுசு - வழக்கு விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தொழிலில் சிந்தித்து முடிவெடுக்கவும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். 


மகரம் - மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் ஆதரவுகள் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். 


கும்பம் -   குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும். வியாபார ரீதியான பயணங்கள் ஏற்படலாம். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். புகழ் நிறைந்த நாளாக இருக்கும்.  


மீனம் - வீட்டிற்கு சிறு சிறு மாற்றங்கள் செய்வீர்கள். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு நீங்கும். இழுபறியான கடன் பிரச்சனைகள் ஓரளவிற்கு குறையும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாதத்திற்கு 10 நாளாவது ஆபீஸுக்கு வாங்கப்பா.. ஊழியர்களுக்கு உத்தரவிட்ட இன்போசிஸ்!

news

சினிமாவா இது.. பாலிவுட்டிலிருந்து வெளியேறினார் இயக்குநர் - நடிகர் அனுராக் காஷ்யப்!

news

கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ₹3151 போதாது.. டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

news

அடிக்கும் வெயிலுக்கு இதமாக.. தமிழ்நாட்டில் 10ம் தேதி முதல் 3 நாட்கள் ஜில் ஜில் மழைக்கு வாய்ப்பு..!

news

மார்ச் 7ல் வெளியாக இருந்த.. அஸ்திரம் பட ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்!

news

கைது பூச்சாண்டிக்கெல்லாம் பாஜகவினர் பயந்து பின்வாங்க மாட்டார்கள்.. அண்ணாமலை ஆவேசம்

news

International Women's Day: எழுந்து நின்று வெற்றிக்கொடி நாட்டு பெண்ணே!

news

திடீரென சவரனுக்கு ரூ.360 குறைந்த தங்கம்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற.. மூக்குத்தி அம்மன் பார்ட் 2 படத்தின் பூஜை..!

அதிகம் பார்க்கும் செய்திகள்