12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Apr 05, 2025,11:07 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், பங்குனி 22ம் தேதி சனிக்கிழமை

அஷ்டமி. அதிகாலை 02.16 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 10.47 வரை திருவாதிரை நட்சத்திரம், பிறகு புனர்பூசம் நட்சத்திரம் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 07.30 முதல் 08.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை 

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் -  அனுஷம், கேட்டை


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறுதொழில் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அக்கம், பக்கத்தினரை புரிந்து கொள்வீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். பொருளாதார முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.


ரிஷபம் - நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் அனுபவம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத வரவுகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாளாக இருக்கும்.


மிதுனம் - இனம்புரியாத சிந்தனைகள் மூலம் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் ஏற்படும். பணிகளில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அமைதிய வேண்டிய நாளாக இருக்கும்.


கடகம் - கடன் விஷயங்களில் நெருக்கடிகள் உண்டாகும். செல்வாக்கை வெளிக்காட்ட சில செலவுகள் செய்வீர்கள். செயல்களில் ஆர்வமின்மை காணப்படும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மன அமைதியை தரும். பயணங்களால் சோர்வு ஏற்படும்.


சிம்மம் - புதிய முயற்சிகளில் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மனதில் பலவிதமான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும்.


கன்னி - பெரியோர்களின் ஆலோசனையால் செயல்களில் இருந்து வந்த குழப்பம் விலகும்.எதிலும் வேகத்தை விட விவேகத்தை கடைபிடிக்கவும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும், புரிதலும் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


துலாம் -  எதிலும் சுறுசுறுப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வாழ்க்கை துணை வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். வியாபாரத்தில் விவேகம் வேண்டும். மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.


விருச்சிகம் - எண்ணிய பணிகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணத்தில் புதிய அனுபவம் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செயல்களில் தடைகள் உண்டாகும். குடும்ப விஷயத்தை பகிர்வதை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.


தனுசு - குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சொத்துக்களால் லாபகரமான சூழல் அமையும். நட்பு அதிகரிக்கும்.


மகரம் - பண வரவுகள் அதிகரிக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசால் அனுகூலம் ஏற்படும். விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தேவைகள் நிறைவேறும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். 


கும்பம் -  பூர்வீக சொத்துக்களில் லாபம் அதிகரிக்கும். மனதில் புதிய ஆசைகள் தோன்றும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். வியாபாரத்தில் பொறுப்புகளும், அலைச்சலும் அதிகரிக்கும். தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அனுபவம் அதிகரிக்கும்.


மீனம் - வசதிகளை அதிகரிப்பதற்கான எண்ணம் அதிகரிக்கும். பணிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். எதிர்காலம் தொடர்பான சில பணிகளை மேற்கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளில் சில மாற்றம் செய்வீர்கள். மனதில் புதிய சந்தனைகள் பிறக்கும். எதிலும் கவனத்துடன் இருக்க வேண்டிய நாள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்