12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் மார்ச் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Mar 05, 2025,10:10 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு மார்ச் 05 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 21 ம் தேதி புதன்கிழமை

வளர்பிறை சஷ்டி. கிருத்திகை. மாலை 05.47 வரை சஷ்டி, பிறகு சப்தமி திதி உள்ளது . காலை 07.19 வரை பரணி  நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. காலை 07.19 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் -  அஸ்தம், சித்திரை




இன்றைய ராசிபலன் :


மேஷம் -  உறவுகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நேர்மறை சிந்தனையுடன் செயல்பட வேண்டும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பெருந்தன்மையான செயல்களால் நம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். சவாலான பணிகளை சாமர்த்தியாக செய்து வெற்றி காண்பீர்கள். 


ரிஷபம் - மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். எதிர்பாராத சில மாற்றம் உண்டாகும். பிடிவாத குணத்தை குறைத்துக் கொள்ளவும். எழுத்து தொடர்பான பணிகளில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். விட்டுக் கொடுத்து செல்லவும்.


மிதுனம் - எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். முதலீடு விஷயங்களில் கவனம் வேண்டும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். அயல்நாட்டு பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதுவிதமான பயணங்கள் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். 


கடகம் -  எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். முயற்சிகளில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இழுபறியான பணவரவுகள் வந்து சேரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 


சிம்மம் - முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். பணிகளில் புதிய ஆதரவுகள் கிடைக்கும். வெளியுலக அனுபவங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். பகை மறையும். 


கன்னி -  வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பணி தொடர்பான பயணங்கள் ஏற்படலாம். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். 


துலாம் - எதிர்பாராத புதிய வாய்ப்புகள் மூலம் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பத நல்லது. சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். எதிர்காலம் தொடர்பான பணிகளில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். 


விருச்சிகம் - வாழ்க்கை துணை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். போட்டிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரிய பேச்சுக்கள் வெற்றி அடையும்.  ஆதரவு அதிகரிக்கும்.


தனுசு - புதிய வேலை தொடர்பான செயல்பாடுகளில் இருந்த தடை, தாமதங்கள் விலகும். மனதில் வேலை தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மன உறுதி அதிகரிக்கும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். 


மகரம் - பழக்க, வழக்கங்களில் மாற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய பொருட்கள் மீத ஆர்வம் அதிகரிக்கும். மனதில் புதிய கற்பனைகள் அதிகரிக்கும். விவேகத்துடன் செயல்படுவது நல்லது.


கும்பம் -   உறவினர்கள் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சில ஆலோசனைகளால் மனதில் மாற்றம் ஏற்படும். உத்தியாகத்தில் அதிகாரங்கள் அதிகரிக்கும். தொழிலில் உயர்வு ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். அமைதியுடன் நடந்த கொள்ள வேண்டிய நாள். 


மீனம் - சுப முயற்சிகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் உயர்வான நிலை ஏற்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொகுதிகள் மறு வரையறையை 30 வருடத்திற்குத் தள்ளி வையுங்கள்.. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

news

வெயில் காலங்களில்.. சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.. சூப்பராக வந்த ஹேப்பி நியூஸ்!

news

தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது.. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!

news

விகிதாச்சாரம் குறையக்கூடாது.. அனைத்துக் கட்சிகளின் நிலைப்பாடு இது.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட தேவை எழுந்துள்ளது.. விசிக தலைவர் திருமாவளவன்..!

news

ஹலோ.. இன்னிக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க.. வெளில வெயிலைப் பார்த்தீங்கள்ள.. கவனம்!

news

அஜீத், கமல்ஹாசன் வழியில் நயன்தாரா.. லேடி சூப்பர்ஸ்டாரை துறந்தார்.. அடுத்து ரஜினிகாந்த்தா?

news

பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தருக்கு என்னாச்சு.. நல்லாதானே இருந்தார்.. ஏன் இந்த விபரீத முடிவு?

news

தென் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை.. பெரும் தண்டனையே.. விஜய் அறிக்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்